/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., சமூக கணக்கெடுப்பு இன்று முதல் வீடுகளில் ஸ்டிக்கர்
/
எஸ்.சி., சமூக கணக்கெடுப்பு இன்று முதல் வீடுகளில் ஸ்டிக்கர்
எஸ்.சி., சமூக கணக்கெடுப்பு இன்று முதல் வீடுகளில் ஸ்டிக்கர்
எஸ்.சி., சமூக கணக்கெடுப்பு இன்று முதல் வீடுகளில் ஸ்டிக்கர்
ADDED : ஜூன் 23, 2025 09:21 AM
பெங்களூரு : 'எஸ்.சி., சமூக கணக்கெடுப்பு நடந்த வீடுகளின் கதவுகளில் இன்று முதல் ஸ்டிக்கர் ஒட்டப்படும்' என பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ் அறிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எஸ்.சி., சமூக கணக்கெடுக்கும் பணிகள், கடந்த மாதம் 5ம் தேதி துவங்கியது. இதற்கான பொறுப்பு நீதிபதி நாகமோகன் தாசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. வரும் 30ம் தேதி வரை பணிகள் நடத்தப்படும். கணக்கெடுப்பு நடத்தப்பட்ட வீடுகளின் கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் இன்று துவங்குகிறது. இதன் மூலம் கணக்கெடுப்பு நடந்து முடிந்து விட்டது என்பதை எளிதில் அடையாளம் காண முடியும்.
இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கதவுகளில் ஒட்டபட்ட ஸ்டிக்கரை அகற்றக்கூடாது. இதுவரை கணக்கெடுப்பில் பங்கேற்காத எஸ்.சி., சமூகத்தினர், 'கர்நாடகா ஒன்', 'பெங்களூரு ஒன்', 'கிராம ஒன்' ஆகிய இ - சேவை மையங்களுக்கு அல்லது வார்டு அலுவலகங்களுக்கு சென்று தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.