ADDED : ஜூலை 21, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவில் வசிக்கும் பெற்றோர், தங்களின் மகளை பத்ராவதியின், ஹுனசேகட்டே கிராமத்தில் உள்ள, கித்துார் ராணி சென்னம்மா உறைவிட பள்ளியில், ஏழாம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர்.
பள்ளிக்கு சென்று முதல்வர் நாம்தேவை சந்தித்து, மகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து பேசினர். அவர் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து, மாணவியின் பெற்றோர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தனர். அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர். நேற்று மதியம் பள்ளிக்கு சென்ற மாணவியின் பெற்றோர், 10,000 ரூபாயை முதல்வர் நாம்தேவிடம் கொடுத்தனர். அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், நாம்தேவை கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
