/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
13 வருஷத்துக்கு முன் பலாத்காரம்; பள்ளி ஆசிரியர் அதிரடி 'சஸ்பெண்ட்'
/
13 வருஷத்துக்கு முன் பலாத்காரம்; பள்ளி ஆசிரியர் அதிரடி 'சஸ்பெண்ட்'
13 வருஷத்துக்கு முன் பலாத்காரம்; பள்ளி ஆசிரியர் அதிரடி 'சஸ்பெண்ட்'
13 வருஷத்துக்கு முன் பலாத்காரம்; பள்ளி ஆசிரியர் அதிரடி 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 05, 2025 11:49 PM
சாம்ராஜ் நகர்: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவி, சைகை மொழி மூலம், 13 ஆண்டுகளுக்கு முன், தன்னை பள்ளி ஆசிரியர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவத்தை கூறியதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகாலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், 13 ஆண்டுகளுக்கு பின், அக்டோபர் 29ல் பள்ளியில் சந்தித்து கொண்டனர். ஒவ்வொருவராக மேடையில் ஏறி, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, ஒரு குழந்தைக்கு தாயான, வாய் பேச முடியாத, 29 வயது பெண் ஒருவர், சைகை மொழியில் பேச துவங்கினார். 'இப்பள்ளியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு, 2012 - 13ல் படித்தபோது, ஆசிரியர் பென்னி வர்க்கீஸ், தன்னை பலாத்காரம் செய்தார். என்னை மட்டுமின்றி, மேலும் பல மாணவியரை பலாத்காரம் செய்தார்' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
போலீசில் புகார் இதை கேட்ட சக முன்னாள் மாணவர்களும், பள்ளி நிர்வாகமும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் சதானந்த், கொள்ளேகால் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது ஆசிரியர் பென்னி வர்க்கீஸ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட எஸ்.பி., கவிதா கூறியதாவது:
பெங்களூரு கல்கேரியில் உள்ள சன்சைன் குழந்தைகள் கேம்பஸ் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் சதானந்த், அக்., 30ம் தேதி கொள்ளேகால் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதில், 2012 - 13ம் ஆண்டில் தன் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவியை, ஆசிரியர் பென்னி வர்க்கீஸ், பலாத்காரம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். மாணவி பாதிக்கப்பட்டபோது, மைனர் என்பதால், 'போக்சோ' வழக்குப் பதிவாகி உள்ளது.
போலீசார் பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனாலும், பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், மாணவி பலாத்காரத்துக்கு உள்ளானது உறுதியானது. சம்பந்தப்பட்ட ஆசிரியரால், வேறு மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்று விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை ஆசிரியர் கைது பல்லாரி மாவட்டம், சந்துாரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவியருக்கு, தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, தாலுகா கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது.
உடனடியாக, அதிகாரிகள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றனர். அங்கிருந்த மாணவ - மாணவியரிடம் விசாரித்தனர். புகார் உண்மை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஜம்பண்ணா, 58 மீது, சந்துார் போலீசில் அதிகாரிகள் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

