/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹுஸ்கூர் ஏரியில் முதலை கிராமத்தினர் அச்சம்
/
ஹுஸ்கூர் ஏரியில் முதலை கிராமத்தினர் அச்சம்
ADDED : நவ 05, 2025 11:49 PM

மைசூரு: புலி, சிறுத்தைகளின் தொந்தரவுக்கு இடையே, நஞ்சன்கூடின் ஹுஸ்கூர் கிராமத்தின் ஏரியில் காணப்படும் முதலை, மக்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், ஹுஸ்கூர் கிராமத்தில் புலி நடமாட்டம் உள்ளது. இதற்கு முன்பு சிறுத்தைகளும் கிராமத்தினரை அச்சுறுத்தின. மக்கள் உயிர் பயத்துடன் வாழ்கின்றனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில், கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் மூன்று நாட்களாக முதலை தென்படுகிறது. நீரில் முதலை மிதப்பதை கவனித்த விவசாயி ஒருவர், கிராமத்தினருக்கு தெரிவித்து எச்சரித்தார்.
வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று நாட்களாகியும் வனத்துறையினர் வராததால், கிராமத்தினர் எரிச்சல் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதிகாரிகளின் உத்தரவுப்படி, நேற்று வனத்துறை ஊழியர்கள் ஹுஸ்கூர் கிராமத்துக்கு வந்து, முதலையை தேடுகின்றனர்.
முதலை இன்னும் பிடிபடாததால், விவசாயிகள் வயலுக்கோ, தோட்டத்துக்கோ செல்ல தயங்குகின்றனர். 'ஏரி அருகில் யாரும் வர வேண்டாம்' என, கிராமத்தினரை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

