/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாக பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி
/
நாக பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி
ADDED : ஏப் 14, 2025 06:12 AM

பல்லாரி : பல்லாரி மாவட்டத்தில் உள்ளது ஹோசா மோகா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ராவாணி, 15. இவர் அதே கிராமத்தில், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமி, பழைய வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, உறக்கத்தில் இருந்த சிறுமியை வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு கடித்துள்ளது.
நேற்று காலையில் சிறுமி எழுந்திருக்கவில்லை. பெற்றோர் எழுப்ப முயற்சித்தனர். சிறுமியின் உடம்பில் அசைவோ, உணர்வோ இல்லை. அவரது உடம்பில் பாம்பு கடித்த அடையாளங்கள் இருந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி இறந்து விட்டதையும் அறிந்தனர்.
ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, பாம்பு வீட்டில் உள்ளதா என தேடினார். வீட்டிற்குள் மறைந்திருந்த பாம்பை அடித்து கொன்றார்.

