/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விளையாட்டு மைதானம் கேட்டு பிரதமருக்கு பள்ளி மாணவி கடிதம்
/
விளையாட்டு மைதானம் கேட்டு பிரதமருக்கு பள்ளி மாணவி கடிதம்
விளையாட்டு மைதானம் கேட்டு பிரதமருக்கு பள்ளி மாணவி கடிதம்
விளையாட்டு மைதானம் கேட்டு பிரதமருக்கு பள்ளி மாணவி கடிதம்
ADDED : ஆக 05, 2025 07:00 AM

துமகூரு : அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரும்படி, பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு 4ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடக மாநிலம், துமகூரு தாலுகாவில் உள்ளது பெலேதரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. மொத்தம், 169 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் கிடையாது.
இதனால், மாணவர்கள் விளையாட முடியாத சூழல் உள்ளது. இது குறித்து அப்பள்ளியில் படிக்கும் தொட்டாரா கிராமத்தை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி, சிம்ரா சனோபர், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் விளையாட முடியவில்லை. இதனால், மன சோர்வு ஏற்படுகிறது. விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, கடந்த ஆண்டே வட்டார கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதினேன். அவரும் மைதானம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால், இதுவரை மைதானம் அமைக்கவில்லை. எனவே, மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானம் அமைத்து தரும் வரை பள்ளிக்கு வர மாட்டேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

