sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு தனி சுற்றுலா கொள்கை: சிவகுமார்

/

 கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு தனி சுற்றுலா கொள்கை: சிவகுமார்

 கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு தனி சுற்றுலா கொள்கை: சிவகுமார்

 கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு தனி சுற்றுலா கொள்கை: சிவகுமார்


ADDED : ஜன 11, 2026 05:46 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிண கன்னடா: ''கேரளா, கோவா போன்று கர்நாடகாவின் கடலோர மா வட்டங்களுக்கு தனி சுற்றுலா கொள்கை அமல்படுத்தப்படும்,'' என துணை முதல்வர் சி வகுமார் தெரிவித்தார்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில், சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்துவதில் முந்தைய அரசும், தற்போதைய அரசும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

மங்களூரு இளைஞர்கள் புத்திசாலிகள்; அறிவுத்திறன் மிக்கவர்கள். ஆனால், இங்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால், வேலை தேடி மும்பை, துபாய், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர். இதை தடுப்பதே எங்கள் குறிக்கோள்.

வெளிநாடுகளில் வசிக்கும் இப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள், தங்கள் ஊரில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கடலோர மாவட்டங்களின் மேம்பாட்டுக்காக, தனி சுற்று லா கொள்கையை வகுக்க அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக, அதிகாரிகள், தொழிலதிபர்கள், உள்ளூர் பி ரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

இங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து, வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உள்ளனர். சுற்றுலா வளர, உள்கட்டமைப்பு முக்கியம். மங்களூரில் சர்வதேச அளவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் பற்றாக்குறை உள்ளது. அதை சமாளிக்க, பி.பி.பி., எனும், தனியார், பொதுத்துறை கூட்டமைப்பு தேவை.

கடலோர பகுதியில் சுற்றுலாவுக்கு இடையூறாக இருக்கும் 'சி.ஆர்.இசட்.,' எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்' விதிமுறைகள், பாதுகாப்பு, கடலோர போலீஸ் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து விரைவில் விவாதிக்கப்படும்.

இதில் தொழில் முனைவோர், பொது மக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். முதலீட்டாளர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us