தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு பின்னடைவு

 முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு பின்னடைவு

 முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு பின்னடைவு


ADDED : ஏப் 12, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலார்: வனத்துறை நில ஆக்கிரமிப்பு வழக்கில், முன் னாள் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு, 20 ஆண்டு போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வனநிலத்தை வனத்துறையிடமே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோலார் மாவட்டம், சீனிவாசப்பூர் தாலுகா, ஹோசஹுத்யா கிராமத்தின் சர்வே எண் 1 மற்றும் 2-ல், 60.23 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், 2007 ஆகஸ்டில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மீது, வனத்துறை நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்ந்தது. 2025 ஜனவரி 15, 16ம் தேதிகளில் வருவாய் துறையும், வனத்துறையும் இணைந்து சர்வே நடத்தி அறிக்கை சமர்ப்பித்தன.

இந்த அறிக்கை தொடர்பாக கே.ஆர்.ரமேஷ்குமார் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு ஆணையமும், வனப்பாதுகாவலர் பெங்களூரின் நீதிமன்றமும் 'கூட்டு சர்வே செய்து அறிக்கையின் அடிப்படையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை காலி செயய வேண்டும். ரமேஷ்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த உத்தரவை பெற்ற நாளிலிருந்து, 30 நாட்களுக்குள், ஆக்கிரமிப்பு நிலத்தைக் காலி செய்து, அதை ஒப்படைக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோலார் துணை வனப் பாதுகாவலர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us