/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு பின்னடைவு
/
சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு பின்னடைவு
சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு பின்னடைவு
சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு பின்னடைவு
ADDED : ஜூலை 11, 2025 10:57 PM
பெங்களூரு: மின்சார வாகனம் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 2,500 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட்டுள்ளது.
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மற்றொரு பக்கம் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதை கருத்தில் கொண்டு, பலரும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளும் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன.
மாநிலத்தில் ஏற்கனவே உள்ள மின்சார வாகனங்களின் தேவைக்காகவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், 2,500 சார்ஜிங் மையங்கள் அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு தயாரானது.
டெண்டர் அழைத்து திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, பெஸ்காமிடம் ஒப்படைக்கப்பட்டது. பெஸ்காமும் சார்ஜிங் மையங்கள் அமைக்க டெண்டர் அழைத்தது. ஆனால் இதில் பங்கேற்க ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே திட்டத்தை செயல்படுத்துவது கஷ்டம் என, பெஸ்காம் அறிக்கை அளித்தது.
எனவே இந்த திட்டத்தில் இருந்து, அரசு பின் வாங்கியுள்ளது. 2023ல், பெஸ்காம் ஒன்பது மாவட்டங்களில், 585 சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டம் வகுத்தது. ஆனால் மற்ற துறைகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால், அப்போதும் திட்டம் கைவிடப்பட்டது.