/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் மாற்றம் விவகாரம் தொடர்பாக சிவகுமார்... திடீர் டில்லி பயணம்!; சித்தராமையாவை 'போட்டு கொடுக்க' திட்டம்?
/
முதல்வர் மாற்றம் விவகாரம் தொடர்பாக சிவகுமார்... திடீர் டில்லி பயணம்!; சித்தராமையாவை 'போட்டு கொடுக்க' திட்டம்?
முதல்வர் மாற்றம் விவகாரம் தொடர்பாக சிவகுமார்... திடீர் டில்லி பயணம்!; சித்தராமையாவை 'போட்டு கொடுக்க' திட்டம்?
முதல்வர் மாற்றம் விவகாரம் தொடர்பாக சிவகுமார்... திடீர் டில்லி பயணம்!; சித்தராமையாவை 'போட்டு கொடுக்க' திட்டம்?
ADDED : அக் 06, 2025 04:34 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையாவிடம் இருந்து பதவியை தட்டிப் பறிக்க, துணை முதல்வர் சிவகுமார் முயற்சித்து வருகிறார். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக சிலர் கூறுவது உண்மை என்றால், அடுத்த மாதம் முதல்வர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 'ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர்' என்று, சித்தராமையா அழுத்தம், திருத்தமாக கூறி வருகிறார். இது சிவகுமாருக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திரைமறைவு சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், 'எங்கள் தலைவரே 5 ஆண்டுகளும் முதல்வர்; இதில் எந்த மாற்றமும் இல்லை' என்று கோரசாக கூறி வருகின்றனர்.
'எல்லாவற்றையும் கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும்; மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்' என்று சிவகுமார் கூறினாலும், முதல்வர் பதவியை பிடிக்க திரைமறைவில் அவரும், வேலை பார்க்க ஆரம்பித்து உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பெங்களூரு வந்த கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம், சித்தராமையா, அவரது ஆதரவாளர்களை பற்றி சிவகுமார் புகார் கூறி உள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, முதல்வர் பதவி குறித்து பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி விவாதிக்க டில்லி வரும்படி சிவகுமாருக்கு, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை சிவகுமார் திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சதாசிவநகரில் உள்ள தன் வீட்டில் அவர் அளித்த பேட்டியில், ''தனிப்பட்ட காரணங்களுக்காக டில்லி செல்கிறேன். நாளை (இன்று) திரும்ப வந்து விடுவேன்,'' என்றார்.
'சிவகுமார் மீது சி.பி.ஐ.,யில் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இதுபற்றி மூத்த வக்கீல்களுடன் விவாதிக்க, அவர் டில்லி சென்று உள்ளார்' என்று, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
ஆனாலும், காங்கிரஸ் பொது செயலர்கள் வேணுகோபால், பிரியங்காவை சந்தித்து, சிவகுமார் பேச உள்ளார். சித்தராமையா பற்றியும், அவருக்கு ஆதரவாக பேசுபவர்களை பற்றியும், 'போட்டு கொடுக்கும்' திட்டத்தில் அவர் உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. சித்தராமையாவுக்கு ஆதரவாக ராகுலும், சிவகுமாருக்கு ஆதரவாக சோனியா, பிரியங்காவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா ஆதரவு கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், முதல்வர் பதவிக்காக டில்லியில் சித்தராமையா, சிவகுமார் முட்டி மோதினர். சோனியா கூறியதன்பேரில், சிவகுமார் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றார் என்பது கவனிக்கத்தக்கது. சோனியா, பிரியங்கா, வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் ஆதரவுடன், முதல்வர் பதவியை பிடிக்க சிவகுமார் தீவிரமாக முயற்சித்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.