தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சித்தராமையாவுடன் சிவகுமார் சந்திப்பு மோதல் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி

சித்தராமையாவுடன் சிவகுமார் சந்திப்பு மோதல் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி

சித்தராமையாவுடன் சிவகுமார் சந்திப்பு மோதல் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையா இல்லத்துக்கு முதல்வர் சிவகுமார் நேரில் சென்று, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

சமீப நாட்களாக கர்நாடகாவில் நடக்கும் அரசியல் நிலவரங்கள், ஆளுங்கட்சியான காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக சில நாட்களுக்கு முன், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில், முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது, ஒரு பெண் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

‘இது பற்றி சரியாக விசாரணை நடத்தி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை. தன்னை குறி வைக்கின்றனர்’ என, சித்தராமையா எரிச்சல் அடைந்துள்ளார்.

இதற்கிடையே நடந்து முடிந்த மேல்சபை தேர்தலில், நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பால், தயிர், பஸ் கட்டணம் என, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் சித்தராமையாவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் கடந்த 7ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சிவகுமார் உட்பட, சில தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய, ஹாசனுக்கு செல்ல திட்டமிட்டதால், அவர் டில்லிக்கு செல்லவில்லை. இது சர்ச்சைக்கு காரணமானது.

சிவகுமார், சித்தராமையா இடையிலான விரிசல் அதிகரித்தால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இத்தகைய சூழ்நிலை நல்லது அல்ல என, மூத்த தலைவர்கள் அஞ்சினர்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, முதல்வர் சிவகுமார், நேற்று காலை சித்தராமையாவின், ‘காவிரி’ இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார். இருவரும் சிறிது நேரம், நலம் விசாரித்தனர்.

அப்போது முதல்வரின் அரசியல் செயலர் பொன்னண்ணாவும் உடன் இருந்தார். சித்தராமையாவை சந்தித்ததன் மூலம், தங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை என்பதை முதல்வர் உணர்த்த முயற்சித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us