தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஆடு மேய்ப்பவருக்கு காட்சியளித்த

ஆடு மேய்ப்பவருக்கு காட்சியளித்த

ஆடு மேய்ப்பவருக்கு காட்சியளித்த


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: கலபுரகி மாவட்டம், கட்டர்காவில் பீமா ஆற்றின் அருகில் ஸ்ரீ பாக்யவந்தி கோவில் அமைந்து உள்ளது.

இக்கோவிலின் தோற்றம், விஜயநகர பேரரசின் வீழ்ச்சியால் உருவானது. லட்சுமி தேவியின் தெய்வீக வடிவம் என்று நம்பப்படும் தேவி பாக்யவதி, ஆனேகுந்தியில் வசித்து வந்தார். ராமராய மன்னரின் ஆணவத்தாலும், தெய்வீக எச்சரிக்கையை புறக்கணித்ததாலும், அவரின் ராஜ்ஜியத்தில் இருந்து பாக்யவந்தி வெளியேறினார். இது விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு வழிகுத்தது.

அங்கிருந்து வெளியேறிய பாக்யவந்தி, துங்கபத்ரா, கிருஷ்ணா நதிகள் வழியாக பயணித்தார். நிறைவில் தற்போதுள்ள பீமா நதியின் நீருக்கு அடியில் குடியேறினார். அதன்பின், அப்பகுதியில் ஒரு நாள் ஆடுகளை மேய்த்த ஜாமண்ணா என்பவர் ஆற்றின் அருகில் வந்தார். அப்போது அவருக்கு பாக்யவந்தியின் அசரிரீ கேட்டது. பின் ஜாமண்ணா முன் கண்ணாடி துாணாக பாக்யவந்தி காட்சி அளித்தார். பின், துாணில் பாம்பு வடிவம் எடுத்தார்.

இவ்விஷயத்தை கிராமத்தில் உள்ளவர்களிடம் ஜாமண்ணா தெரிவித்தார். அவர்களும் பக்தி, நம்பிக்கையுடன் அந்த துாணை கிராமத்திற்கு எடுத்து வந்தனர். கிராமத்திற்கள் நுழைந்ததும், கண்ணாடி துாண், கல் துாணாக மாறியது. ஜாமண்ணாவின் கனவில் தோன்றிய பாக்யவந்தி, சில காலம் அங்கிருந்தார். பின், கிராமத்தின் மூத்த பெண்மணியான சென்னம்மா கவுடின் வீட்டில் துாண் நிறுவப்பட்டது.

இந்த இல்லத்தை சுற்றிலும், கோவில் கட்டப்பட்டது. தேவியின் அருளால், கிராமம் ஆன்மிக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் செழிக்க துவங்கியது. இன்றளவும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us