/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டாக்டர் கிருத்திகா கொலை வழக்கில் அதிர்ச்சி மாதவிடாய் நேரத்தில் காலில் ஊசி போட்ட கணவர்
/
டாக்டர் கிருத்திகா கொலை வழக்கில் அதிர்ச்சி மாதவிடாய் நேரத்தில் காலில் ஊசி போட்ட கணவர்
டாக்டர் கிருத்திகா கொலை வழக்கில் அதிர்ச்சி மாதவிடாய் நேரத்தில் காலில் ஊசி போட்ட கணவர்
டாக்டர் கிருத்திகா கொலை வழக்கில் அதிர்ச்சி மாதவிடாய் நேரத்தில் காலில் ஊசி போட்ட கணவர்
ADDED : அக் 16, 2025 11:22 PM

பெங்களூரு: டாக்டர் கிருத்திகா கொலை வழக்கில் அவரது கணவர் மகேந்திர ரெட்டியின் நாடகங்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தன. மனைவியை கொல்ல தொடர்ந்து அவர் ஊசி செலுத்தியதும் தெரிய வந்தது.
பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்த டாக்டர் மகேந்திர ரெட்டிக்கும், தோல் மருத்துவர் கிருத்திகா ரெட்டி, 28, என்பவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர்.
திருமணத்துக்கு பின், தன் மனைவி கிருத்திக்காவுக்கு அஜீரணம், இரைப்பை மற்றும் குறைந்த நீரிழிவு இருப்பதை மகேந்திரா அறிந்தார். ஒரு முறை தன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, கிருத்திகா மயங்கி விழுந்தார். இதையறிந்த மகேந்திர ரெட்டி அங்கு சென்றார். மனைவிக்கு அவரே சிகிச்சை அளித்தார்.
கடந்த ஏப்., 23ம் தேதி முற்றிலும் சுயநினைவை இழந்த கிருத்திகா, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கிருத்திகா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி கூறியதால், கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு பின், மாரத்தஹள்ளி போலீசாருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கிருத்திகாவின் தந்தை முனி ரெட்டி, போலீசில் புகார் அளித்தார். மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டார்.
மகேந்திர ரெட்டி சிக்கியது குறித்து போலீசார் கூறியது:
'கிருத்திகாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். மனைவியின் உடல் வெட்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது' என, மகேந்திர ரெட்டி, அழுது நாடகம் போட்டு உள்ளார். ஆனாலும் கிருத்திகாவின் தங்கையான நிகிதா கொடுத்த அழுத்தத்தால், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
கிருத்திகா இறந்த பின்னரும், அவரது வீட்டிற்கு மகேந்திர ரெட்டி அடிக்கடி சென்றுள்ளார்.
கிருத்திகாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பது போன்று நடித்துள்ளார்.
வேறு திருமணம் செய்து கொள்ளும்படி, கிருத்திகா குடும்பத்தினர் கூறிய போதும், 'வேண்டாம்' என்று கூறி கண்ணீர் விட்டு நடித்துள்ளார்.
மாமனாரின் சொத்துகளை அபகரிக்க, அவர் நாடகமாடியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிருத்திகாவுக்கு இருந்த உடல்நல பிரச்னைகளுக்கு, வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவே அவர் விடவில்லை.
'நானே பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி, வீட்டில் வைத்து சிகிச்சை அளித்ததுடன், அளவுக்கு அதிகமாக ஊசிகளை போட்டுள்ளார்.
மாதவிடாய் காலத்தில் கூட, கிருத்திகாவின காலில் ஐ.வி., ஊசியை செலுத்தி உள்ளார். மகேந்திர ரெட்டிக்கும், மணிப்பால் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், அந்த டாக்டரை திருமணம் செய்யவே, கிருத்திகாவை தீர்த்துக்கட்டியதாகவும் கூறப்படுவது பற்றி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மகேந்திர ரெட்டியும், கிருத்திகாவும் திருமணத்திற்கு முந்தைய 'ப்ரீ வெட்டிங் போட்டோஷுட்டை' காஷ்மீருக்கு சென்று எடுத்து கொண்டனர்.
தால் ஏரி, பனி சறுக்கு பகுதிகளில் அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம், வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
நாடகமாடினார் தடயவியல் அறிக்கையை பார்த்து, நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கிருத்திகாவுக்கு புரோபோபால் ஊசியை, மகேந்திர ரெட்டி அதிகமாக போட்டுள்ளார். அந்த ஊசி, ஐ.சி.யு.,வில் மட்டுமே பயன்படுவது. இந்த ஊசி போட்டால் ஆழ்ந்த மயக்கத்திற்கு கொண்டு செல்லும். கிருத்திகாவுக்கு உடல்நல பிரச்னை இருந்தாலும் 28 வயதில் மரணம் அடைந்ததை, என்னால் நம்ப முடியவில்லை. நானும் டாக்டர் என்பதால், சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தேன். தன் மீது எந்த தவறும் இல்லை என்பது போல, என் குடும்பத்தினரிடம், மகேந்திர ரெட்டி நாடகம் ஆடினார். திருமணத்திற்கு பின் என் சகோதரியை கண்டுகொள்ளவில்லை. சொந்தமாக கிளினிக் வைக்க கிருத்திதா ஆசைப்பட்டார். அவர் சம்மதிக்கவில்லை. மகேந்திர ரெட்டிக்கும், பெண் டாக்டருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது, எங்கள் உறவினர்கள் மூலம் தெரியவந்தது. ஊசியை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்று தெரியவில்லை. நிகிதா , கிருத்திகாவின் தங்கை
குடும்ப
பின்னணி
மகேந்திர ரெட்டியின் சகோதரர் நாகேந்திர ரெட்டியும், இளம்பெண்ணும் காதலித்தனர். திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். திருமணத்தை பதிவு செய்ய அழைத்துச் சென்று, இளம்பெண்ணை தவிக்க விட்டு நாகேந்திர ரெட்டி தப்பிச் சென்றார். நியாயம் கேட்க சென்ற இளம்பெண்ணை தாக்கியதுடன், ஆபாசமாகமாகவும் நாகேந்திர ரெட்டி திட்டியுள்ளார். இந்த வழக்கில் மகேந்திர ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஹெச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குப்பதிவானது. நீதிமன்றத்திலும் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி, 20 லட்சம் ரூபாய் கொடுத்து, வழக்கை முடித்து வைத்துள்ளனர். அன்றைய தினம் மாலையில் தான் கிருத்திகா இறந்துள்ளார்.