/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார்: மகன் யதீந்திரா நம்பிக்கை
/
சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார்: மகன் யதீந்திரா நம்பிக்கை
சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார்: மகன் யதீந்திரா நம்பிக்கை
சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார்: மகன் யதீந்திரா நம்பிக்கை
ADDED : பிப் 07, 2026 06:40 AM

மைசூரு: ''ஆட்சிக்காலம் முடியும் வரை, என் தந்தை சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார். அதற்கு மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா கூறினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாட காவில், முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை. முதல்வர் சித்தராமையா நல்லாட்சி நடத்துகிறார். ஆட்சிக்காலம் முழுதும் அவரே முதல்வராக நீடிப்பார். அவர் பதவியில் நீடிக்க, காங்கிரஸ் மேலிடம் பச்சைக்கொடி கா ட்டியுள்ளது.
மாநிலத்தில் முதல்வர் மாற்றம் குறித்து மேலிடம் ஆலோசிக்கவில்லை. இதுகுறித்து, ஊடகங்களில் மட்டுமே விவாதம் நடக்கிறது. தற்போது கவனிக்க வேண்டிய பல விஷயங்கள், பிரச்னைகள் உள்ளன. அதற்கு தீர்வு காண வேண்டும். பட்ஜெட் நெருங்குகிறது. நிதி வருவாயும் பழையபடி இல்லை. மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியும் வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தில் எங்கள் மேலிடம் கவனம் செலுத்துகிறது.
சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டும் என, யாரும் கூறவில்லை. சிலரின் வேண்டுகோளுக்கு மேலிடம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனக்கு தெரிந்த வரை முதல்வர் மாற்றம் இருக்காது.முதல்வர் பதவி குறித்து, காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. வேண்டுமானால் முதல்வர், துணை முதல்வரிடம் கேட்டுப் பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

