/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
படிக்கட்டுகளில் ஏற முடியல பங்கேற்காமல் சென்ற சித்து
/
படிக்கட்டுகளில் ஏற முடியல பங்கேற்காமல் சென்ற சித்து
படிக்கட்டுகளில் ஏற முடியல பங்கேற்காமல் சென்ற சித்து
படிக்கட்டுகளில் ஏற முடியல பங்கேற்காமல் சென்ற சித்து
ADDED : ஜூன் 04, 2025 01:20 AM
கதக்: கதக் டவுனில் உள்ள பண்டித் பீம்சென் ஜோஷி ரங்கா மந்திராவில் அரசு சார்பில், கதக் - பெட்டகேரி வர்த்தக கண்காட்சி துவக்க விழா நேற்று மதியம் நடந்தது.
இந்த விழாவை துவக்கி வைக்க முதல்வர் சித்தராமையா வந்தார். விழா மேடையில் ஏறும் படிக்கட்டுகள் உயரமாக இருந்தது. தனக்கு மூட்டுவலி இருப்பதால் உயரமான படிக்கட்டுகளில் ஏறி செல்ல முடியாது என்று, சித்தராமையா கூறினார்.
இதனால் மேடைக்கு நேராக செல்லும் வகையில் உள்ள, இரண்டு கதவுகளை திறந்து முதல்வரை அழைத்து வர, அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் முயற்சித்தார். ஆனால் இரண்டு கதவுகளையும் திறக்கவே முடியவில்லை.
கடுப்பான முதல்வர், 'இதை எல்லாம் முன்கூட்டியே கவனிக்க கூடாதா' என்று அதிகாரிகளை திட்டிவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் சென்று விட்டார்.