தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/எல்லை பாதுகாப்பு படையில் கலக்கும் சகோதரியர்

எல்லை பாதுகாப்பு படையில் கலக்கும் சகோதரியர்

எல்லை பாதுகாப்பு படையில் கலக்கும் சகோதரியர்


UPDATED : அக் 26, 2026 12:04 AM

ADDED : அக் 25, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:04 AM ADDED : அக் 25, 2026 07:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கடினமான பயிற்சி மற்றும் உழைப்பால் அக்காவும், தங்கையும் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் எல்லையை, காவல் காக்கின்றனர்.

பெலகாவி நகரின், கடக்கல்லியை சேர்ந்தவர் ஸ்வராஞ்சலி, 25; இவரது தங்கை கீதாஞ்சலி, 23. இவர்களின் தந்தை சிவாஜி ஜாதவ், ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறு வயதிலேயே ஸ்வராஞ்சலிக்கும், கீதாஞ்சலிக்கும் ராணுவத்தில் சேரும் கனவு இருந்தது.

சிறு வயதிலேயே ராணுவ உடை அணிந்து மகிழ்ந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் தாத்தா சதாசிவ ஜாதவ். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தன் பேத்திகளின் மனதில் தேசப்பற்று விதையை விதைத்தார்.

சகோதரியரின் சித்தப்பா அசோக் ஜாதவ், தாய் மாமா மாருதி காகதகரும் கூட ராணுவத்தில் இருந்தனர். இதுவும், சகோதரியரை ராணுவத்தில் சேர துாண்டியது. ஸ்வராஞ்சலி எம்.ஏ., எக்கனாமிக்ஸ், கீதாஞ்சலி பி.ஏ., பட்டப்படிப்பை முடித்ததும், ராணுவத்தில் சேர தயாராகினர். தினமும் காலை, மாலை உடற் பயிற்சியில் ஈடுபட்டனர். மணிக்கணக்கில் மைதானத்தில் வியர்வை சிந்தினர்.

ஆர்வம், விடா முயற்சியால் 2023ல் இருவரும், எல்லை பாதுகாப்பு படையான பி.எஸ்.எப்.,புக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தின் பைகுன்டபுராவில் உள்ள பி.எஸ்.எப்., பயிற்சி மையத்தில் ஒன்பது மாதங்கள் கடும் பயிற்சி பெற்றனர்.

அதன்பின் ஸ்வராஞ்சலி, மேற்கு வங்கத்தின் ராணிநகர் பி.எஸ்.எப்., முகாமிலும், கீதாஞ்சலி ஜம்மு - காஷ்மீரின், ஸ்ரீநகரிலும் பணியாற்றுகின்றனர்.

'ஆர்மி பிசிகல் டிரெய்னிங்'கில் நாட்டிலேயே முதலிடத்தை பெற்றனர். கமாண்டோ பயற்சியிலும் சாதனை செய்து பதக்கம் பெற்றனர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களாலும், எல்லையை காவல் காக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

இது குறித்து, ஸ்வராஞ்சலி கூறியதாவது:

ராணுவத்தில் சேர எங்கள் தாத்தாவே உந்துதலாக இருந்தார். தந்தை, சித்தப்பா, தாய்மாமாவும் உற்சாகப்படுத்தினர். ஆண்களை போன்று பெண்களும் திறமையானவர்கள்.

அவர்கள் செய்யும் அனைத்து பணிகளையும், பெண்களாலும் செய்ய முடியும்.

ராணுவத்தில் சேரும் போது கடுமையான பயிற்சி இருந்தது. பயிற்சி எப்போது துவங்கும், எப்போது முடியும் என்பதே தெரியாது. இதில் நான் முதலிடமும், என் தங்கை கீதாஞ்சலி இரண்டாம் இடமும் பிடித்தோம். எனக்கு விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். பி.எஸ்.எப்., சென்ட்ரல் டீம் அத்லெட்டிக்கில் இருக்கிறேன்.

வரும் நாட்ளில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் தேர்வு எழுதி, அந்த பதவியில் அமர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ராணுவத்தில் சேர பெண்கள் முன் வர வேண்டும்.

இங்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சிறிது கஷ்டப்பட்டால், யார் வேண்டுமானாலும் ராணுவத்தில் சேரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us