/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை சரியில்லை: மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு
/
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை சரியில்லை: மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை சரியில்லை: மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை சரியில்லை: மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு
ADDED : டிச 12, 2025 06:39 AM

பெங்களூரு: ''தர்மஸ்தலா வழக்கில், எஸ்.ஐ.டி., விசாரணை தவறான பாதையில் செல்கிறது,'' என, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்மஸ்தலா வழக்கு பற்றி விசாரிக்க எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது. அங்கு புதைக்கப்பட்டதாக கூறப்படும் உடல்களை கண்டுபிடிக்கவே இல்லை. அங்கு நடந்த மர்ம மரணங்கள் குறித்தும் விசாரிக்கவில்லை. எஸ்.ஐ.டி., குழு விசாரணை தவறான பாதையில் செல்கிறது.
சிறுமியர், பெண்கள் மர்மமான முறையில் அங்கு இறந்து உள்ளனர். இதுபற்றி விசாரிக்க வேண்டும். பெண்கள் மரணம் குறித்து விசாரிக்கும்படி அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். தர்மஸ்தலா குறித்து பொய் புகார் அளித்ததாக கைதான சின்னையாவை விசாரிப்பதில் மட்டுமே, எஸ்.ஐ.டி., தீவிரமாக உள்ளது.
வேறு எதை பற்றியும் அவர்கள் விசாரிக்கவில்லை. பெண்களுக்கு ஆதரவாக பேசுவதால் என்னை சிலர் தவறாக சித்திகரிக்கின்றனர். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறேன். இதில் ஜாதி பாகுபாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மஸ்தலா வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த எஸ்.ஐ.டி., சின்னையா உட்பட 6 பேர் சதிகாரர்கள் என்று கூறி இருந்தது. விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், மாநில மகளிர் ஆணைய தலைவி, எஸ்.ஐ.டி., மீது குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

