/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஹாதேவப்பா மீது சிவகுமார் எரிச்சல்
/
மஹாதேவப்பா மீது சிவகுமார் எரிச்சல்
ADDED : ஏப் 15, 2025 06:58 AM

பெங்களூரு: பெங்களூரின், விதான்சவுதா படிகளின் மீது, அம்பேத்கர் ஜெயந்தி விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வந்திருந்த முதல்வர் சித்தராமையாவுக்கு, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, சால்வை அணிவித்து கவுரவித்தார். அம்பேத்கர் உருவச்சிலையை வழங்கினார்.
அப்போது சிலை, முதல்வரின் கையில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதனால் முதல்வர் தர்ம சங்கடத்துக்கு ஆளானார். அதன்பின் சமாளித்து கொண்டு, மேடையில் பேசினார்.
முதல்வர் உரையாற்றி முடித்த பின், துணை முதல்வர் சிவகுமார் உரையாற்ற மைக் முன் நின்றார். அப்போது அமைச்சர் மஹாதேவப்பா, முதல்வர் சித்தராமையாவுடன் பேசி கொண்டிருந்தார். சிவகுமார் உரையாற்றுவதையும் கவனிக்கவில்லை.
அமைச்சர் பேசியபடி இருந்ததால், கடுப்படைந்த சிவகுமார், அமைச்சரின் பெயர் சொல்லி அழைத்து, 'நிகழ்ச்சி நடத்துவதா வேண்டாமா. நான் உரையாற்றவா அல்லது இங்கிருந்து செல்லட்டுமா' என கோபமாக கத்தினார்.
அதன்பின், அமைச்சர் பேசுவதை நிறுத்தி கொண்டார். சிவகுமார் தொடர்ந்து பேசினார்.