/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆர்.எஸ்.எஸ்., பாடலை சிவகுமார் பாடியிருக்க கூடாது'
/
'ஆர்.எஸ்.எஸ்., பாடலை சிவகுமார் பாடியிருக்க கூடாது'
'ஆர்.எஸ்.எஸ்., பாடலை சிவகுமார் பாடியிருக்க கூடாது'
'ஆர்.எஸ்.எஸ்., பாடலை சிவகுமார் பாடியிருக்க கூடாது'
ADDED : ஆக 27, 2025 10:54 PM

பெங்களூரு : துணை முதல்வர் சிவகுமார் சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியதற்கு, காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சுதாரித்து கொண்ட சிவகுமார் தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக கூறினார். அவரது கருத்தை பா.ஜ., தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக நேற்று பேசி உள்ளார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டியில், ''ஆர்.எஸ்.எஸ்., பாடலை சிவகுமார் பாடியிருக்க கூடாது. இதற்கு வருத்தம் தெரிவித்து, தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார். இத்துடன் பிரச்னை முடிந்து விட்டது. இனி யாரும் இந்த பிரச்னையை கையில் எடுத்து பேச கூடாது,'' என்றார்.