ADDED : ஆக 02, 2026 11:09 PM
ஜிகனி: பெங்களூரின் ஆனேக்கல் பகுதியில் வசிக்கும், 24 வயது வாலிபருக்கு, 'டேட்டிங்' எனப்படும், பாலியல் ரீதியில் செயல்படும் செயலி மூலம், ஜிகனி பகுதியில் வசிக்கும் விஷால், 18, என்பவரின் பழக்கம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வரும்படி வாலிபரை, விஷால் அழைத்தார். அதன்படி, கடந்த மாதம் 26ம் தேதி, ஜிகனியில் இருவரும் சந்தித்தனர். திடீரென அங்கு வந்த மேலும், ஐந்து பேர், விஷாலுடன் சேர்ந்து, வாலிபரை தாக்கினர். அவரிடம் இருந்து மொபைல் போன், 2,000 ரூபாயை கொள்ளையடித்தனர். வாலிபர் அளித்த புகாரில், ஜிகனி போலீசார் விசாரித்தனர்.
இந்த வழக்கில் விஷால், அவரது நண்பர்கள் அஜய், 19, சூர்யா, 19, சஞ்சய், 22, 16, 17 வயது சிறுவர்கள் இருவர் என ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ரொக்கம், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
