/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகாரப்பூர்வமாக கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைப்பு உறுப்பினர்களாக நிர்மலா சீதாராமன் உட்பட 6 தமிழர்கள் நியமனம்
/
அதிகாரப்பூர்வமாக கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைப்பு உறுப்பினர்களாக நிர்மலா சீதாராமன் உட்பட 6 தமிழர்கள் நியமனம்
அதிகாரப்பூர்வமாக கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைப்பு உறுப்பினர்களாக நிர்மலா சீதாராமன் உட்பட 6 தமிழர்கள் நியமனம்
அதிகாரப்பூர்வமாக கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைப்பு உறுப்பினர்களாக நிர்மலா சீதாராமன் உட்பட 6 தமிழர்கள் நியமனம்
UPDATED : ஆக 27, 2025 11:33 AM
ADDED : ஆக 27, 2025 08:09 AM

பெங்களூரு : கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைவராக முதல்வர் சித்தராமையாவும், துணை தலைவராக சிவகுமாரும், தமிழர்களான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மணிவண்ணன், ராம்பிரசாத் மனோகர், ராஜேந்திர சோழன், தீபா சோழன், ராமச்சந்திரன் உட்பட 73 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு நகர மக்களுக்கு அரசின் சேவைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் வகையில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் கீழ் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, சென்ட்ரல் என, 5 மாநகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. அடுத்த மாதம் 2ம் தேதி முதல் ஆணையம் செயல்பட உள்ளது.
இந்த ஆணையத்தின் தலைவராக முதல்வர் இருப்பார் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
ஆணையத்தின் தலைவராக முதல்வர் சித்தராமையா, துணை தலைவராக பெங்களூரு நகர அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார் இருப்பர்.
ராமலிங்கரெட்டி கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய சிறு, குறு தொழில் இணை அமைச்சருமான ஷோபா, பெங்களூரு நகரை சேர்ந்த அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, ஜார்ஜ், பைரதி சுரேஷ், தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பைரேகவுடா, ஜமீர் அகமதுகான்.
பா.ஜ., - எம்.பி.,க்கள் பெங்களூரு சென்ட்ரல் மோகன், பெங்களூரு ரூரல் டாக்டர் மஞ்சுநாத், பெங்களூரு தெற்கு தேஜஸ்வி சூர்யா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ், சந்திரசேகர், நாராயண கொரகப்பா, ஜக்கேஷ், லேகர்சிங் சிரோயா.
பத்மநாபநகர் அசோக் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கே.ஆர்.புரம் பைரதி பசவராஜ், எலஹங்கா விஸ்வநாத், ஆர்.ஆர்.நகர் முனிரத்னா, தாசரஹள்ளி முனிராஜ், மஹாலட்சுமி லே அவுட் கோபாலய்யா, மல்லேஸ்வரம் அஸ்வத் நாராயண், சி.வி.ராமன்நகர் ரகு, ராஜாஜிநகர் சுரேஷ்குமார், சிக்பேட் உதய் கருடாச்சார், பசவனகுடி ரவி சுப்பிரமணியா, எதிர்க்கட்சி தலைவரும், பத்மநாபநகர் எம்.எல்.ஏ.,வுமான அசோக், ஜெயநகர் ராமமூர்த்தி, மஹாதேவபுரா மஞ்சுளா லிம்பாவளி, பொம்மனஹள்ளி சதீஷ் ரெட்டி, பெங்களூரு தெற்கு கிருஷ்ணப்பா.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் புலிகேசிநகர் சீனிவாஸ், சிவாஜிநகர் ரிஸ்வான் அர்ஷத், சாந்திநகர் ஹாரிஸ், கோவிந்தராஜ்நகர் பிரியா கிருஷ்ணா, விஜயநகர் கிருஷ்ணப்பா, யஷ்வந்த்பூர் சோமசேகர்.
எம்.எல்.சி.,க்கள் காங்கிரசின் புட்டண்ணா, கோவிந்தராஜ், ஹரிபிரசாத், நசீர் அகமது, யதீந்திரா சித்தராமையா, பா.ஜ.,வின் கோபிநாத், கேசவ பிரசாத், எம்.டி.பி.நாகராஜ், நாகராஜ், ம.ஜ.த.,வின் ஷ்ரவணா, ஜவராயி கவுடா.
மணிவண்ணன், ராம்பிரசாத் மனோகர் கிரேட்டர் பெங்களூரு ஆணைய கமிஷனர், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வர ராவ், பி.டி.ஏ., கமிஷனர் மணிவண்ணன், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் ரவிசங்கர், பெங்களூரு பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணைய கமிஷனர் ராஜேந்திர சோழன், நகர்ப்புற நில போக்குவரத்து கமிஷனர் தீபா சோழன்.
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குநர் ராமசந்திரன், பெங்களூரு மின்சார விநியோக நிறுவன நிர்வாக இயக்குநர் சிவசங்கர், பெங்களூரு நகர கலெக்டர் ஜெகதீஷ், கர்நாடக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை இயக்குநர் சிவசங்கர், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநகராட்சிகளின் கமிஷனர்கள் என, 73 பேர் ஆணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.