ADDED : ஜூன் 14, 2026 05:08 AM
பெங்களூரு: 'கே.எஸ்.ஆர்., பெங்களூரு பணிமனையில் ரயில்வே பணிகள் நடப்பதால், பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ஆறு ரயில்கள் உட்பட, 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன' என, தென் மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ரயில் எண் 12291: யஷ்வந்த்பூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ஜூலை 31; எண் 12292: சென்னை சென்ட்ரல் - யஷ்வந்த்பூர் விரைவு ரயில் ஆக., 1ல் ரத்து செய்யப்படுகிறது.
எண் 12657: சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் ஆக., 1; 12658: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் ரயில் ஆக., 2ல் ரத்து செய்யப்படுகிறது.
எண் 16021 சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் ரயில் ஆக., 2ம்; 16022: அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் ஆக., 3ல் ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல, பெங்களூரு, யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும் ரயில்களும், மைசூரு, துமகூரு, ஹப்பள்ளி, தானாபூர், கலபுரகியில் இருந்து வரும் ரயில்களும் என 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மாற்று வழித்தடம் அது போல, ரயில் எண் 16022: அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில், வரும் 16 முதல், 21ம் தேதி வரை; 23 முதல் 26, 28, 29, 30, ஜூலை 1, 2; 4, 5, 8 முதல், ஆக., 2 வரை, கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்தப்பூர், ஹெப்பால், பானஸ்வாடி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, பையப்பனஹள்ளி வழியாக செல்லும் ரயில், பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது.
16021: சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் ரயில், ஜூன் 19, 27, 28, ஜூலை 3, 13, 31 நாட்களில், கே.ஆர்.,புரம், பையப்பனஹள்ளி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, பானஸ்வாடி, ஹெப்பால், யஷ்வந்த்பூர், கே.எஸ்.ஆர்., பெங்களூரு வழியாக செல்லும் ரயில், பெங்களூரு ஈஸ்ட், பெங்களூரு கன்டோன்மென்ட்களில் நிற்காது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
