பழச்சாறில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
பழச்சாறில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
ADDED : ஜூன் 14, 2026 11:31 PM
சிக்கபல்லாபூர்: இளம்பெண்ணுக்கு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவில், 24 வயது இளம்பெண் வசிக்கிறார். இவர் திருமணமானவர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், பெங்களூரில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றிருந்தார். பின், அங்கிருந்து சித்லகட்டா திரும்பும் போது, வழியில் ஒரு நபரை சந்தித்தார்.
அந்த நபர், பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்த நபர், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அது மட்டுமின்றி, பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து கொண்டார். அதை அவரிடம் காட்டி, மிரட்டி தன் வீட்டுக்கு வரவழைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
வீடியோ காண்பித்து மிரட்டியே, 400 கிராம் எடையுள்ள தங்க நகைகள், லட்சக்கணக்கான ரூபாயை பறித்து கொண்டார். மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். ஒன்றரை ஆண்டாக தொடர்ந்த அந்த நபரின் தொந்தரவால் வெறுப்படைந்த அந்த இளம்பெண், சித்லகட்டா போலீஸ் நிலையத்துக்கு நேற்று வந்து, போலீசாரிடம் நடந்ததை கூறி புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
