தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அறுசுவை துணுக்குகள்

அறுசுவை துணுக்குகள்

அறுசுவை துணுக்குகள்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

 வடை மாவில் தண்ணீர் அதிகமானால், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்தால் மாவு கெட்டியாகும்

 மு ள்ளங்கியை வேக வைக்கும் போது, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்

 வெந்த ஜவ்வரிசியில் பச்சை மிளகாய், பூண்டு அரைத்து சேர்த்து வடகம் செய்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்

 வெங்காய சட்னி செய்யும் போது, வெங்காயத்தை நன்றாக வதக்கி செய்தால் கசப்பு தெரியாது

 அடைக்கு தேவையான பருப்புகளை, ரவை போல உடைத்து வைத்தால், வெந்நீரில் ஊற வைத்து விரைவாக அடை செய்யலாம்

 சேமியா பாயாசத்தில் பாலும், தேங்காய் பாலும் சமமான அளவில் சேர்த்தால், கூடுதல் சுவை தரும்

 முள்ளங்கி இலையை வதக்கி, மிளகாய் வற்றல், உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் கிடைக்கும்

 வெண் பொங்கல் செய்யும் போது பொங்கல் வெந்ததும், காய்ச்சிய பாலை ஒரு கரண்டி சேர்த்து கிளறி மூடி வைத்தால், பொங்கல் மேலும் சுவையாக இருக்கும்

 வறுவல் அல்லது கூட்டில் உப்பு, காரம் அதிகமாகி விட்டால், ரஸ்கை பொடியாக்கி சிறிதளவு துாவினால் சுவை சரியாகும்

 வெஜிடபிள் ரைஸ், நெய் சாதத்தை தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து சமைத்தால் சுவை மேலும் சிறப்பாக இருக்கும்

 தேங்காய் துவையல் அரைக்கும் போது, சிறிதளவு இஞ்சி சேர்த்தால், நல்ல மணம், சுவையுடன் இருக்கும்

 வேகவைத்த கடலை பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து பூரணம் செய்து, கோதுமை மாவில் போளி செய்தால் சுவை துாக்கலாக இருக்கும்

 வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து, வெண்டைக்காய் பொரியலில் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்

 எந்த காயில் பொரியல் செய்தாலும், சிறிதளவு பீட்ரூட் மற்றும் கேரட்டை துருவி சேர்த்து வதக்கினால் சுவை அதிகரிக்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us