தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சர்க்கரை சேர்க்காத நெல்லிக்காய் – பேரீச்சை லட்டு

சர்க்கரை சேர்க்காத நெல்லிக்காய் – பேரீச்சை லட்டு

சர்க்கரை சேர்க்காத நெல்லிக்காய் – பேரீச்சை லட்டு


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: நெல்லிக்காய் பேரீச்சை லட்டுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, குளிர்காலத்தில் உடல் நலத்துக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

செய்முறை:



 முதலில் பேரீச்சை பழங்களில் இருந்து விதைகளை முழுமையாக நீக்க வேண்டும். அவற்றை ஒரு மிக்சியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியான, வழவழப்பான விழுதாக அரைக்கவும்.

பின், புதிய நெல்லிக்காய்களை எடுத்து, சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும். பின், நெல்லிக்காயை துருவவும்.

 அடுப்பில் வாணலியை வைத்து, நன்கு சூடாக்கவும். பின், ஒரு தேக்கரண்டி சுத்தமான நெய் சேர்க்கவும். நெய் உருகியதும், துருவிய நெல்லிக்காயை வாணலியில் சேர்த்து, அதில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம், பச்சை வாசனை நீங்கும் வரை, மிதமான சூட்டில் தொடர்ந்து கிளிக் கொண்டே இருக்கவும்.

 தயாரித்து வைத்துள்ள பேரீச்சை விழுதை, வறுத்த நெல்லிக்காய்களுடன் சே ர்க்கவும். இந்த கலவையுடன் வெள்ளை எள், ஏலக்காய் துாள், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்க்கவும்.

 தீயை குறைத்து, கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அனைத்து பொருட்களும் நன்றாக கலந்து, பாத்திரத்தில் இருந்து பிரியத் தொடங்கும் போது, கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து லட்டு போன்று உருட்ட முடியுமா என்று பார்க்கவும். கலவை எளிதாக வட்ட வடிவம் எடுத்தால், அது தயாராகிவிட்டது.

 அடுப்பை அணைத்துவிட்டு, அந்த கலவையை ஒரு தட்டு அல்லது கிண்ணத்திற்கு மாற்றவும். அது சிறிது ஆறட்டும். உங்கள் கைகளில் சிறிதளவு நெய் தடவி, அந்த கலவையிலிருந்து ஏற்ற சைசில் லட்டுகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

 நீங்கள் விரும்பினால், இந்த லட்டுகளை மேலும் அழகாகவும், சுவையாகவும் தோற்றமளிக்க, அவற்றின் எல்லாப் பக்கங்களிலும் தேங்காய் துாளை துாவி உருட்டலாம்.

சத்தான மற்றும் சுவையான, சர்க்கரை சேர்க்காத நெல்லிக்காய் -– பேரீச்சை லட்டுகள் தயார். இவற்றை காற்று நுழையாத டப்பாவில் போட்டு வைத்தால், பல நாட்களுக்கு சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us