/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்கள் விளையாடுவது மகிழ்ச்சி ஸ்மிருதி மந்தனா பெருமிதம்
/
பெண்கள் விளையாடுவது மகிழ்ச்சி ஸ்மிருதி மந்தனா பெருமிதம்
பெண்கள் விளையாடுவது மகிழ்ச்சி ஸ்மிருதி மந்தனா பெருமிதம்
பெண்கள் விளையாடுவது மகிழ்ச்சி ஸ்மிருதி மந்தனா பெருமிதம்
ADDED : பிப் 04, 2025 06:43 AM

பெங்களூரு: ''பெண்கள் வெளியே வந்து விளையாடுவதை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது,'' என, ஆர்.சி.பி., அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் விளையாட்டுகளை மக்களிடையே கொண்டு செல்வதற்கு, 'ஸ்போர்ட்ஸ் பார்வேட் நேஷன்' எனும் அமைப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 'ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி ஆக்சிலரேட்டர்' எனும் விளையாட்டு அமைப்பும் நடத்தி வருகின்றன.
இந்த அமைப்பு விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளையும் மக்களிடையே கொண்டு செல்கிறது.
குறிப்பாக, பெண்களை விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த அமைப்பின் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும், ஏற்கனவே செய்து முடித்த சாதனைகள் குறித்தும், நேற்று சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆர்.சி.பி., அணியின் தலைமை இயக்க அதிகாரி ராஜேஷ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஸ்போர்ட்ஸ் பார்வேட் நேஷன் அமைப்பு குறித்த புத்தகத்தை ஸ்மிருதி மந்தனா வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் பங்கேற்கும் போட்டிகளை மக்கள் பார்க்க துவங்கி உள்ளனர். சிலர் நல்லதாகவும், கெட்டதாகவும் கருத்துகளைதெரிவிக்கின்றனர். எது எப்படியோ, பெண்கள் விளையாடும் போட்டிகள் பற்றி மக்கள் பேச துவங்கி விட்டார்கள் என்பதே ஆனந்தமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, உலக கோப்பை வெல்வதே என் ஆசையாக இருந்தது. ஆனால், தற்போது தெருக்களில் பெண்கள் கிரிக்கெட் மட்டை வைத்துக் கொண்டு செல்வதை பார்ப்பதே ஆனந்தமாக இருக்கிறது.
இவர்கள் தொழில் முறை கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் வீட்டில் இருந்தாவது வெளியே வந்துவிளையாட ஆரம்பித்துள்ளனர். இதை நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது.
உமன்ஸ் பிரீமியர் லீக் மூலம் பல பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். டபிள்யூ.பி.எல்., ஐ பார்ப்பதற்கும் பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். பெண்கள் வீட்டில் இருப்பதை விட, வெளியே வந்து விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

