ADDED : ஆக 18, 2026 02:52 AM
பீதர்: இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் பாம்பு கடித்து, இருவர் உயிரிழந்தனர்.
பீதர் மாவட்டம், ஹுலசூரா தாலுகாவின் சூலதாபகா கிராமத்தில் வசித்தவர் பீம் மாதவராவ் ஜாதவ், 48. இவர், ஹுலசூரா கிராம பஞ்சாயத்தில் வாட்டர் மேனாக பணியாற்றினார். கிராமத்தின் ஹாலஹள்ளி சாலை அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு, தண்ணீர் நிரப்புவது அவரது பணியாகும்.
வழக்கம் போன்று, நேற்று காலையில் பணிக்கு வந்த பீம் மாதவராவ் ஜாதவ், தண்ணீர் திறந்து விட சென்றார். தொட்டி அருகில் சென்ற போது, புதரில் இருந்த நாகப்பாம்பு அவரது காலில் கடித்தது. இதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவில் வசித்தவர் சத்யவ்வா ஷிங்கே, 43. இவர் நேற்று மதியம், தன் நிலத்தில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது களைகளுக்கு நடுவே மறைந்திருந்த, அதிக விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு அவரது கையில் கடித்தது. அவரது குடும்பத்தினர், சத்யவ்வாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் உயிரிழந்தார்.
