தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குற்றச்சாட்டுகளுக்கு சமூக ஆர்வலர் மறுப்பு

 குற்றச்சாட்டுகளுக்கு சமூக ஆர்வலர் மறுப்பு

 குற்றச்சாட்டுகளுக்கு சமூக ஆர்வலர் மறுப்பு


ADDED : ஆக 02, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: ''தர்மஸ்தலா வழக்கில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை,'' என, சமூக ஆர்வலர் ரமா நாகராஜ் கூறியுள்ளார்.

தர்மஸ்தலாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல் புதைக்கப்பட்ட தாக பொய் வழக்கு தொடர, சித்ரதுர்காவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம நாகராஜ், நடிகர் பிரகாஷ் ராஜ் தனக்கு பணம் கொடுத்ததாக சின்னையா புகா ர் அளித்திருந்தார்.

இது குறித்து, ரமா நாகராஜ் நேற்று கூறியதாவது:

தர்மஸ்தலாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கோடிக்கணக்கான ரூபாய் வழங்கியதாக என் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, இவ்வழக்கில் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

சின்னையா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இதற்கு நீதிமன்றத்தில் பதிலடி கொடுக்கப்படும். நான் எந்த தவறும் செய்யவில்லை. இதனால், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

ஒரு கோடி ரூபாயில் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கிறது என எனக்கு தெரியாது. நல்லவர்களுக்கு எப்போதும் நீதி கிடைக்கும். எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us