/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரஸ் பவன் கட்ட விதிமீறலாக இடம் ஒதுக்கீடு; அமலாக்கத்துறையில் சமூக ஆர்வலர் புகார்

ADDED : செப் 07, 2025 10:50 PM
துமகூரு : காங்கிரஸ் பவன் கட்ட, விலை மதிப்புள்ள நிலத் தை, மாநில அரசு சொற்ப தொகைக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, அமலாக்கத்துறையில் புகார் செய்யப்ப ட்டுள்ளது.
கர்நாடகாவின் அனைத்து தாலுகாக்களிலும், 'காங்கிரஸ் பவன்' கட்ட வேண்டும் என, மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அந்தந்த மாவட்டங்களில், நிலம் அடையாளம் காணப்படுகிறது.
கொப்பால் பவன் கட்ட, தேவையான நிலத்தை காங்கிரஸ் பவன் டிரஸ்டுக்கு வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
துமகூரில் விதிமீறலாக 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. துமகூரின் மரளூருதின்னேவில் சர்வே எண் 87/1 மற்றும் 87/2 ல் உள்ள இரண்டு ஏக்கர் நிலம், ஏற்கனவே விவாதத்தில் உள்ளது. இது குறித்து, நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இத்தகைய நிலத்தை காங்கிரஸ் பவன் டிரஸ்டுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த நிலம் 25 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும். ஆனால் வெறும் 17 லட்சம் ரூபாய்க்கு, காங்கிரஸ் பவனுக்காக அளித்துள்ளனர்.
இதனால் அரசு கருவூலத்துக்கு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ், துணை பதிவாளர் நஞ்சேஷ், துமகூரு நகராட்சி கமிஷனர் அஷ்விஜா ஆகியோர் மீது, அமலாக்கத்துறையில் சமூக ஆர்வலர் பசவராஜ் இடிகே என்பவர், நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.