சவுஜன்யா வழக்கு மறு விசாரணை சி.பி.ஐ.,க்கு எஸ்.ஐ.டி., கடிதம்
சவுஜன்யா வழக்கு மறு விசாரணை சி.பி.ஐ.,க்கு எஸ்.ஐ.டி., கடிதம்
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:52 PM
பெங்களூரு: கல்லுாரி மாணவி சவுஜன்யா கொலை வழக்கை மறுவிசாரணை செய்யும் எஸ்.ஐ.டி., வழக்கின் ஆவணங்களை கேட்டு, சி.பி.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளது.
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி உஜ்ரேயில், கடந்த 2012ல் கல்லுாரி மாணவி சவுஜன்யா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு மறுவிசாரணை நடத்த கடந்த மாதம் 21ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூத்த ஐ.பி.எஸ்., சசிகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நிஷா ஜேம்ஸ், லோகேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் மங்களூரு வந்தனர்.
போலீஸ் கமிஷனர் சுதிர்குமார் ரெட்டியுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று முன்தினம் விசாரணை துவங்கியது.
இந்நிலையின் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக லோகேஷை நியமித்து சசிகுமார் நேற்று உத்தரவிட்டார். சவுஜன்யா கொலை வழக்கை முதலில் சி.ஐ.டி.,யும், பின், சி.பி.ஐ.,யும் விசாரித்தது.
இதனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி சி.ஐ.டி., மற்றும் சி.பி.ஐ.,க்கு, எஸ்.ஐ.டி., நேற்று கடிதம் எழுதியுள்ளது.
இன்னும் 90 நாட்களில், நீதிமன்றத்தில் முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் வரும் நாட்களில் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.
