ADDED : மே 23, 2026 04:01 AM

- நமது நிருபர் -: கேரளம் ஸ்டைலில், பலாக்காய் ஸ்பைசி வறுவல் செய்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பலாக்காய் - 1 சிறியது
காஷ்மீரி மிளகாய் துாள் - 1 ஸ்பூன்
மஞ்சள் துாள் - 1 டீஸ்பூன்
உப்பு, தண்ணீர் கலந்தது - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆரக்கு
தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
பலாக்காயின் தோலை நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், தண்ணீரை நன்கு வடித்து விட்டு நறுக்கின பலாக்காயை, போட்டு உப்புத் தண்ணீரை, லேசாக தெளிக்கவும்.
பின், நன்றாக சிவக்க வறுத்து, அடுப்பை நிறுத்தி விட்டு, வறுத்ததை கிண்ணத்தில் போட்டு மேலே மஞ்சள் துாள் போட்டு நன்றாக குலுக்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலையை பொறித்து போடவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக கலக்கினால், கேரளம் ஸ்டைல் பலாக்காய் ஸ்பைசி வறுவல் தயார்.
