sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ வெயிலுக்கு இதமான காலா கட்டா பாப்சிகல்ஸ்

 வெயிலுக்கு இதமான காலா கட்டா பாப்சிகல்ஸ்

 வெயிலுக்கு இதமான காலா கட்டா பாப்சிகல்ஸ்


ADDED : மே 16, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 03:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

நாவல் பழத்தில் பல விதமான புரத சத்துகள் உள்ளன. இதை உணவில் சேர்ப்பது நல்லது. இதில், காலா கட்டா பாப்சிகல்ஸ் செய்து பாருங்கள். மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்

நாவல் பழம் - அரை கிலோ

சர்க்கரை - அரை கப்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

கருப்பு உப்பு - 1 ஸ்பூன்

சீரக துாள் - 1 ஸ்பூன்

சாட் மசாலா - 1 ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

செய்முறை

நாவல் பழங்களின் விதைகளை நீக்கி விட்டு, சதைப்பகுதியை மட்டும் மிக்சியில் போட்டு, நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில், அரைத்த நாவல் பழ கூழ், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 - 12 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

கலவை சற்று கெட்டியானதும் கருப்பு உப்பு, சாட் மசாலா, சீரக துாள் சேர்த்து நன்றாக கிளறி, அடுப்பை அணைக்கவும். நாவல் பழ சிரப் ஆறியதும், வடி கட்டி வைத்து கொள்ளவும். இந்த சிரப்பை ஐஸ் பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி, ஐஸ்கிரீம் குச்சிகளை செருகவும். அதன் பின், ப்ரீசரில் குறைந்தபட்சம் ஆறு - எட்டு மணி நேரம் வரையோ அல்லது இரவு முழுவதும் வைத்திருந்தால், காலா கட்டா பாப்சிகல்ஸ் தயார்.

வெயிலுக்கு இதமாக இருக்கும். புளிப்பு, காரம், இனிப்பு கலந்து மாறுபட்ட சுவையுடன் இருக்கும். குட்டீஸ்கள் மிகவும் விரும்புவர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us