/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல்லாரியை குறி வைக்கும் ஸ்ரீராமுலு
/
பல்லாரியை குறி வைக்கும் ஸ்ரீராமுலு
ADDED : மே 09, 2025 11:35 PM

பல்லாரி: கனிம சுரங்க முறைகேடு வழக்கில், ஜனார்த்தன ரெட்டி மீண்டும் சிறைக்குச் சென்றுவிட்டதால், பல்லாரி அரசியலில் மீண்டும் வலுவாக காலுான்ற ஸ்ரீராமுலு முயற்சித்து வருகிறார்.
பல்லாரி மாவட்ட அரசியலில் பா.ஜ., முன்னாள்அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். ஆனால் அவர் கனிம சுரங்க வழக்கில் 2011ல் சிறைக்கு சென்றார்.
இதையடுத்து பல்லாரி அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் முயற்சியில், ஜனார்த்தன ரெட்டியின் முன்னாள் நண்பரும், முன்னாள் அமைச்சருமான ஸ்ரீராமுலுமுயற்சித்தார்.
வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு, கட்சிக்குள்ளும் நல்ல மதிப்பு இருந்தது.
கனிம சுரங்க வழக்கில்சிறையில் இருந்து வெளியே வந்ததும், பல்லாரி அரசியலில், ஜனார்த்தன ரெட்டி மூக்கை நுழைத்தது ஸ்ரீராமுலுவுக்கு பிடிக்கவில்லை. ரெட்டியை மீண்டும் பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டதையும் அவரால் முழு மனதுடன் ஏற்கமுடியவில்லை.
என்ன முடிவு?
கடந்த ஆண்டு சண்டூர்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட ஸ்ரீராமுலு முயன்றார். ஆனால் தன் ஆதரவாளர்
பங்காரு ஹனுமந்துக்கு, ஜனார்த்தன ரெட்டி சீட் வாங்கிக் கொடுத்தார். தேர்தலில் பங்காரு ஹனுமந்த் தோற்றார்.
ஸ்ரீராமுலு சரியாக பிரசாரம் செய்ய வராததால் தான், பா.ஜ., தோல்வி அடைந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மனம் உடைந்த ஸ்ரீராமுலு, பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை நட்டா சமாதானம் செய்தார்.
பல்லாரி அரசியல் மீண்டும் ரெட்டிக்கு கைக்கு வந்ததால், விஜயநகராவின் கூட்லிகி மீது ஸ்ரீராமுலு கவனம் செலுத்த ஆரம்பித்தார். அடுத்த சட்டசபை தேர்தலில் கூட்லி கியில் இருந்து போட்டி யிட போவதாகவும்அறிவித்திருந்தார்.
தற்போது கனிம சுரங்க வழக்கில் ரெட்டி மீண்டும்சிறைக்கு சென்றுள்ளார். இதனால் கேப்டன் இல்லாத படகு போல, பல்லாரி பா.ஜ., தலைமையின்றி தவிக்கிறது.
இதை பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீராமுலு முயற்சிக்கிறார். 'பல்லாரியில் நான் தான் எல்லாம்'என்று சொல்லும் அளவுக்கு, மீண்டும் வலு வாக காலுான்றவும் அவர் முயற்சித்து வருகிறார்.
ரெட்டி சிறையில்இருந்தபோது கூட,பல்லாரி பா.ஜ., கோட்டையாக இருந்தது. ஆனால் அவர் ஜாமினில் வந்த பின்னர், பல்லாரி மாவட்டம், பா.ஜ., கையைவிட்டு நழுவியது. அவரை மீண்டும்கட்சியில் சேர்த்ததால், கட்சிக்குள் பிளவும்ஏற்பட்டது.
இதனால் ரெட்டி விஷயத்தில், பா.ஜ., மேலிடம் என்ன முடிவு எடுக்க போகிறது என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

