ஸ்ரீவித்யா அறக்கட்டளை பவுண்டேஷன் 45ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
ஸ்ரீவித்யா அறக்கட்டளை பவுண்டேஷன் 45ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஜூலை 18, 2026 11:07 PM
ஹலசூரு: ஸ்ரீவித்யா அறக்கட்டளை பவுண்டேஷன் சார்பில், பெங்களூரு தொம்மலுார் ஸ்ரீ சூர்யநாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் வரும் 23 முதல், 26ம் தேதி வரை, 45ம் ஆண்டு விழா மற்றும் வேத பாராயண மஹோத்சவம் நடத்தப்படுகிறது.
முதல் நாளான 23ம் தேதி மாலையில், விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை; இரண்டாம் நாளான 24, காலையில் விக்னேஸ்வர பூஜை, சண்முக அர்ச்சனை, தேவத அபிஷேகம், தீபாராதனை; லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை; தீபாராதனை, பிரசாதம்.
மூன்றாம் நாளான 25 காலையில் சாஸ்தா அஷ்டபதி, ஸ்ரீராமசந்திர பாகவதர், சம்பிரதாய பஜனை வித்யாலயம் மாணவர்கள் இணை ந்து நடத்தும் பூர்ண புஷ்பகலா கல்யாண மஹோத்சவம்; மதியம் தீபாராதனை, பிரசாதம் வழங்கல்; தர்மசாஸ்தா சரித்திரம் தொடர்பான கேள்வி பதில், சாஸ்த்ரு அஸ்தபடி, சாஸ்தா பிரீத்தி; மாலையில் பூர்ணிமா ஸ்ரீகாந்தின் சங்கீத உ பன்யாசம்.
மூன்று நாட்களும் மாலையில் தமிழில் துஷ்யந்த்ஸ்ரீதரின், 'உன் நலங்களை அள்ளித்தரும் சுந்தர காண்டம்' சொற்பொழிவு, இரவில் தீபாராதனை, பகவத் பிரசாதம் வழங்கப்படுகிறது.
நான்காம் நாளான 26 காலையில் விக்னேஸ்வர பூஜை, மஹன்யாசபூர்வகா ருத்ராபிஷேகம், அனந்த நாராயணின் பிரதோஷ பூஜை குழுவினரின் தீபாராதனை; ஸ்ரீ அய்யப்ப சஹஸ்ரநாம அர்ச்சதனை, தீபாராதனை, சாஸ்தா பிரீத்தி சாஸ்தா வரவு பாட்டு.
மதியம் பிரசாதம் வழங்கல்; மாலையில் திருப்புகழ் சுந்தரேசன் பாகவதரின் ஆஞ்சநேய உத்சவம்; இரவில் தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது.
விழா நாட்களில் பக்தர்கள் பங்கேற்கும்படி அறக்கட்டளையின் வெங்கடரமணி, ஜெயந்தி, ராமசந்திரன், சந்திரசேகரன், ராஜேந்திரன், ராமநாதன், பிரசன்னா ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு, 99019 35506, 89708 81391 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
