/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மே இறுதிக்குள் மாவட்ட, தாலுகா பஞ்., தேர்தல் இடஒதுக்கீடு ஐகோர்ட்டில் மாநில அரசு உறுதி
/
மே இறுதிக்குள் மாவட்ட, தாலுகா பஞ்., தேர்தல் இடஒதுக்கீடு ஐகோர்ட்டில் மாநில அரசு உறுதி
மே இறுதிக்குள் மாவட்ட, தாலுகா பஞ்., தேர்தல் இடஒதுக்கீடு ஐகோர்ட்டில் மாநில அரசு உறுதி
மே இறுதிக்குள் மாவட்ட, தாலுகா பஞ்., தேர்தல் இடஒதுக்கீடு ஐகோர்ட்டில் மாநில அரசு உறுதி
ADDED : பிப் 18, 2025 06:08 AM

பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில், 'மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல், 12 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்' என, மாநில அரசு, 2023 டிசம்பர் 19ல், உறுதி அளித்தது. ஆனால் மாநில அரசு கடைபிடிக்கவில்லை.
அவமதிப்பு வழக்கு
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த மனுவில், 'நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தொகுதி இடஒதுக்கீடு இறுதிப் பட்டியல் வெளியிடுவதில் மாநில அரசு தவறிவிட்டது. எனவே, இடஒதுக்கீட்டை அறிவிக்க, அரசுக்கு வழிகாட்ட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தது.
இம்மனு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இறுதி பட்டியல்
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசி கிரண் ஷெட்டி வாதிடுகையில், ''மே இறுதிக்குள் மாநில தேர்தல் கமிஷனிடம், மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியல் சமர்ப்பிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்படும். ஜூன், ஜூலை, ஆகஸ்டில் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படாததால், நாங்கள் நேரம் எடுத்துக் கொண்டோம்,'' என்றார்.
தேர்தல் கமிஷன் சார்பில் வழக்கறிஞர் பனீந்திரா வாதிடுகையில், ''ஒற்றை அமர்வு அளித்த உத்தரவின்படி, மாநில அரசு செயல்படாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மே இறுதிக்குள் இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக பிரமாண பத்திரத்தை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுவை தொடர, தேர்தல் கமிஷனுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ''இடஒதுக்கீடு பட்டியலை வெளியிடுவதற்கான வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுவை தொடர கமிஷனுக்கு சுதந்திரம் உள்ளது. எனவே, அரசு மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றனர்.

