/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒத்துழைப்பு அளிக்காத மாநில அரசு ரயில்வே இணை அமைச்சர் வருத்தம்
/
ஒத்துழைப்பு அளிக்காத மாநில அரசு ரயில்வே இணை அமைச்சர் வருத்தம்
ஒத்துழைப்பு அளிக்காத மாநில அரசு ரயில்வே இணை அமைச்சர் வருத்தம்
ஒத்துழைப்பு அளிக்காத மாநில அரசு ரயில்வே இணை அமைச்சர் வருத்தம்
ADDED : செப் 05, 2025 04:48 AM

மைசூரு:''மாநில ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு சரியாக ஒத்துழைப்பதில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பதிலும் இல்லை,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா குற்றஞ்சாட்டி உள்ளார்.
மைசூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
அனைத்து மாநிலங்களை போன்றே கர்நாடகத்திலும் ரயில்வே திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். பயணியருக்கு வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம், ஆனால் மாநில அரசு அதற்கு ஏற்படி செயல்படாமல், அரசியல் செய்கிறது.
சாம்ராஜ் நகரில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான ரயில்பாதை நீட்டிப்பு, மைசூரு - குஷால் நகர் சாலை அமைத்தல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிலம் வழங்கவில்லை.
நான் புதுடில்லியில் இருந்தபோது, துணை முதல்வர் சிவகுமார், மாவட்ட பொறுப்பு வகுக்கும் அமைச்சர் மகாதேவப்பா ஆகியோரிடம் இதுகுறித்து வருத்தம் தெரிவித்தேன்.
மாநிலத்தில் ரயில்வே கீழ்பாலம், மேம்பாலங்களுக்கான மத்திய அரசின் முழு பங்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசிடம் இருந்து நிதி விடுப்பதில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பதிலும் இல்லை. இதை உணர்ந்த பிரதமர் மோடி, மத்திய அரசு சார்பிலேயே 100 சதவீத நிதி வழங்கி வருகிறோம்.
மக்களை தவறாக வழிநடத்தும் விஷயங்களை செய்வதற்கு பதிலாக, வளர்ச்சிக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இப்பிரச்னை குறித்து மாநில அரசுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.