ADDED : ஜூலை 19, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
தார்வாட்: தனியார் உறைவிட பள்ளி மாணவர்கள், வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தார்வாடின், அள்னாவராவில் தனியார் உறைவிட பள்ளி உள்ளது. இதில் படிக்கும், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், வினோதமான காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். கை, கால்களில் அதிக வலியால் துடிக்கின்றனர். இவர்கள் தார்வாடின் பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த பள்ளி மாணவர்களுக்கு, 'வைரல் மையோசிட்ஸ்' அல்லது 'இன்ப்ளுயென்சா ஏ அண்ட் பி' என்ற காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். மாணவர்களின் உடல் நிலையை உன்னிப்பாக கண்காணிக்கின்றனர். ஒரே பள்ளியில், இத்தனை மாணவர்களுக்கு வினோத காய்ச்சல் ஏற்பட்டதால், பெற்றோரும் பீதி அடைந்துள்ளனர்.
