/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் மாரத்தான் மாணவர்கள் பங்கேற்பு
/
தங்கவயலில் மாரத்தான் மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 25, 2025 05:56 AM

தங்கவயல்: தங்கவயல் ரோட்டரி சங்கம், போலீஸ் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, 'போக்கோ' சட்டம், போதை தடுப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.
ராபர்ட்சன்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இருந்து அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்ற 10 கி.மீ., மாரத்தான் ஓட்டத்தை எஸ்.பி., ஷிவாம்ஷு ராஜ்புத், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாணவர்களில் ஒரு அணியினர், ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சதுக்கம், அம்பேத்கர் சாலை, என்.டி.பிளாக் சோளாபுரியம்மன் கோவில், டாப் லைன், சாம்பியன் ஒர்க் ஷாப், கல்லறை பகுதி, சல்டானா சதுக்கம் வழியாக நகராட்சி மைதானத்தை அடைந்தனர். மற்றொரு அணியினர், ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சதுக்கம், காந்தி சதுக்கம், அசோக் நகர், உரிகம் 5 விளக்கு, உரிகம் ரயில் நிலையம், என்.டி.பிளாக், சாம்பியன்ரீப், சல்டானா சதுக்கம், ராபர்ட்சன்பேட்டை நகராட்சி மைதானத்தை அடைந்தனர். மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றோருக்கு உதவுவதற்காக மருத்துவ பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ்களும் சென்றன.
குடிநீர், குளுக்கோஸ், பழ ரசம் வழங்கப்பட்டது. டாக்டர் ராஜேந்திர குமார், டாக்டர் சுரேஷ் குமார் உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

