/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதோலில் கரும்பு விவசாயிகள் போராட்டம் வாபஸ்
/
முதோலில் கரும்பு விவசாயிகள் போராட்டம் வாபஸ்
ADDED : நவ 15, 2025 08:05 AM
பாகல்கோட்: அமைச்சர்களுடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், முதோலில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
ஒரு டன் கரும்புக்கு 3,300 ரூபாய் ஆதரவு விலையாக அரசு நிர்ணயித்த நிலையில், பாகல்கோட்டின் முதோல் தாலுகா விவசாயிகள் 3,500 ரூபாய் நிர்ணயிக்க கோரி, 8 நாட்களாக போராட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தின் போது, சைதாபுரா கிராமத்தில், சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றி சென்ற 30 டிராக்டர்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து கரும்பு விவசாயிகளுடன், பாகல்கோட் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திம்மாபுரா, சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் நேற்று பேச்சு நடத்தினர்.
பாக்கி தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிடுவதாக உறுதி அளித்தனர். இதனால், விவசாயிகள் த ங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

