தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரசு சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 362 கே.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி பறிபோகிறது

அரசு சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 362 கே.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி பறிபோகிறது

அரசு சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 362 கே.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி பறிபோகிறது


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

ஆள்சேர்ப்பு செயல்முறையை செல்லுபடியாக்குவதற்கு அரசு கொண்டு வந்த சட்டத்தை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில், 362 கே.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி பறிபோக உள்ளது.

கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம், குரூப் ஏ, பி பிரிவுகளில் உள்ள அரசு பணிகளுக்கு 362 கே.ஏ.எஸ்., அதிகாரி பதவி ஆள்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிட்டது.

தேர்வு நடந்து தற்காலிக பட்டியல் வெளியான பின், தேர்வில் முறைகேடு நடந்ததாக, தேர்வர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இதனால் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்த போது, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. சி.ஐ.டி., தாக்கல் செய்த அறிக்கையில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பது பற்றி கூறப்பட்டு இருந்ததால், பணிக்கு தேர்வானர்கள் பட்டியலை அரசு ரத்து செய்தது.

இதை எதிர்த்து பலர் கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகினர். அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பணிக்கு தேர்வான 362 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, 362 பேரும் பணியில் சேர்ந்தனர்.

நிர்வாக தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து, சிலர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். தீர்ப்பாய உத்தரவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆனாலும் பணிக்கு தேர்வான 362 பேரின் பணியை உறுதி செய்யும் வகையில், கடந்த 2022ல் ஆட்சியில் இருந்த பா.ஜ., கர்நாடக குடிமை பணிகள் சட்டத்தை இயற்றியது.

இதை எதிர்த்து சீனிவாஸ் என்பவர் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பார்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது.

தனது தீர்ப்பில், 362 பேர் பணியை காப்பாற்ற கொண்டு வந்த கர்நாடக குடிமை பணிகள் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன்மூலம், 362 கே.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us