ADDED : மே 30, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர்:''கே.எம்.எப்.,புக்கு முன்னாள் எம்.பி., சுரேஷ் போன்ற தலைவர் வேண்டும்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வர் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இம்முறை கே.எம்.எப்., தலைவர் பதவி, பெங்களூரு தெற்கு மாவட்டத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கே.எம்.எப்.,புக்கு சுரேஷ் போன்ற திறமையான தலைவர் வேண்டும். இவருக்கு பொது சேவையில் அதிக ஆர்வம் உள்ளது. இப்பதவிக்கு தகுதியானவர்.
கே.எம்.எப்.,பில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். பழைய மைசூரு பகுதியில், அதிகமான பால் உற்பத்தியாகிறது. எனவே இப்பகுதியை சேர்ந்தவர், தலைவராவது நல்லது. வட மாவட்டத்தினர் தலைவரானால், பழைய மைசூரு பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து, அவருக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.