/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.எஸ்.டி.எல்., துாதராக தமன்னா பா.ஜ., - எம்.பி., கடும் எதிர்ப்பு
/
கே.எஸ்.டி.எல்., துாதராக தமன்னா பா.ஜ., - எம்.பி., கடும் எதிர்ப்பு
கே.எஸ்.டி.எல்., துாதராக தமன்னா பா.ஜ., - எம்.பி., கடும் எதிர்ப்பு
கே.எஸ்.டி.எல்., துாதராக தமன்னா பா.ஜ., - எம்.பி., கடும் எதிர்ப்பு
ADDED : பிப் 12, 2026 05:28 AM

பெங்களூரு: கே.எஸ்.டி.எல்., துாதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு, பா.ஜ., - எம்.பி., சுதாகர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன துாதராக, கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட நடிகை தமன்னா நியமிக்கப்பட்டார். பெங்களூரில் தனியார் ஹோட்டலில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் துாதராக பொறுப்பு ஏற்று கொண்டார்.
இந்நிலையில், சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'கர்நாடகாவை சேர்ந்த நடிகைகள் ரம்யா, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீநிதி ஷெட்டி, பூஜா ஹெக்டே, ருக்மணி வசந்த் ஆகிய நடிகைகளின் புகைப்படத்தை பதிவிட்டு, கன்னட நடிகைகள் பல மொழி திரைப்படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக மாறி, கன்னடத்தின் புகழை உயர்த்தி உள்ளனர்.
இவர்களை விட்டுவிட்டு, கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேறு மொழியை சேர்ந்த நடிகையை, கே.எஸ்.டி.எல்., துாதராக நியமித்து இருப்பது, காங்கிரஸ் அரசின் கன்னட எதிர்ப்பு மனநிலைக்கு சான்றாக உள்ளது.
கன்னட நடிகைகள் திறமை, மைசூரு சாண்டல் சோப்பின் அடையாளத்தை காங்கிரஸ் அரசு அவமதித்து உள்ளது. கன்னடர்கள் ஒருபோதும் இதை மன்னிக்க மாட்டார்கள்' என பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ''தமன்னாவை துாதராக நியமித்தது ஏன் என்று, பல மாதங்களுக்கு முன்பே தெளிவுபடுத்தி உள்ளேன். கர்நாடகாவில் மட்டுமல்லாமல், நாடு முழுதும் மைசூரு சாண்டல் சோப்பை பிரபலப்படுத்த, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
''கர்நாடகாவை சேர்ந்தவர்கள் உட்பட ஆறு நடிகைகள் பெயரை, இறுதி செய்து வைத்திருந்தோம். கன்னட நடிகைகள் மற்ற பிராண்டிற்கு துாதர்களாக இருப்பதால், தமன்னாவை தேர்வு செய்தோம்.
' ' இது வளர்ச்சி கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. வரும் 2030 ம் ஆண்டிற்குள் 5,000 கோடி வருவாய் ஈட்டுவது எங்கள் இலக்கு,'' என்றார்.

