/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனநலம் பாதித்த சிறுவன் கண்களில் மிளகாய் பொடி துாவிய ஆசிரியை
/
மனநலம் பாதித்த சிறுவன் கண்களில் மிளகாய் பொடி துாவிய ஆசிரியை
மனநலம் பாதித்த சிறுவன் கண்களில் மிளகாய் பொடி துாவிய ஆசிரியை
மனநலம் பாதித்த சிறுவன் கண்களில் மிளகாய் பொடி துாவிய ஆசிரியை
ADDED : டிச 23, 2025 06:53 AM
பாகல்கோட்: மன நலம் பாதிக்கப்பட்டோரின் உறைவிட பள்ளியில் 16 வயது சிறுவனை, கண் மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் தம்பதி கைது செய்யப்பட்டனர். இதில் சிறுவனின் கண்களில் மிளகாய் பொடி துாவி கொடூர செயல் புரிந்துள்ளார்.
பாகல்கோட் நகரின் 54வது செக்டரில் 'திவ்ய ஜோதி' என்ற பெயரில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான உறைவிட பள்ளி உள்ளது. வெளியூர்களில் இருந்தும் பெற்றோர், தங்களின் பிள்ளைகளை இங்கு சேர்த்துள்ளனர். இந்த பள்ளியில் படித்த தீபக் ராத்தோட், 16, என்ற சிறுவனை ஆசிரியர் அக்ஷய் இங்களகர், பெல்ட்டாலும், பிளாஸ்டிக் பைப்பாலும் கொடூரமாக தாக்கினார். அவரது மனைவியும், ஆசிரியையுமான மாலினியும் சிறுவனின் கண்களில் மிளகாய் பொடியை போட்டு கொடுமைப்படுத்தினார்.
இந்த பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் விட்டல், விஷாலும் கூட மாணவர்களை தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தீபக் ராத்தோட், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, நேற்று முன் தினம் அக்ஷய் இங்களகர், மாலினியை போலீசார், விசாரணைக்கு அழைத்து சென்றனர். இவர்கள் தவறு செய்திருப்பது உறுதியானதால், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் விட்டல், விஷாலிடம் விசாரணை நடக்கிறது. அவர்கள் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த திவ்ய ஜோதி உறைவிட பள்ளியை மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், பார்வையிட்டனர். இங்கு 40 சிறார்கள் உள்ளனர். மன நலம் பாதிக்கப்பட்டோரின் உறைவிட பள்ளி, முறைப்படி அனுமதி பெறாமல் செயல்படுவது தெரிந்தது.
இங்குள்ள சிறார்கள், சிறுவர் காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். திவ்யஜோதி உறைவிட பள்ளிக்கு பூட்டு போடப்படும். தீபக் ராத்தோட் தாக்கப்படும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால், பெற்றோர் பலரும் இங்கு வந்து பிள்ளைகளை, வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:
மன நலம் சரியில்லாத சிறார்களை தாக்கிய சம்பவம், கொடூரமான செயலாகும். சமுதாயத்துக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. உறைவிட பள்ளி அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக செயல்படுகிறது. பள்ளிக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை, அங்கு அனுப்பியுள்ளோம். பெற்றோரின் அனுமதியுடன், சிறார்களை அரசு காப்பகத்துக்கு மாற்றுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

