/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓய்வுக்கு பிறகும் கல்வி கற்பிக்கும் ஆசிரியை சுஜாதா
/
ஓய்வுக்கு பிறகும் கல்வி கற்பிக்கும் ஆசிரியை சுஜாதா
ஓய்வுக்கு பிறகும் கல்வி கற்பிக்கும் ஆசிரியை சுஜாதா
ஓய்வுக்கு பிறகும் கல்வி கற்பிக்கும் ஆசிரியை சுஜாதா
ADDED : செப் 07, 2025 10:52 PM

மருத்துவ தொழில் போன்று, கல்வி கற்பிப்பதும் புனிதமான பணியாகும். டாக்டர்கள் உயிரை காப்பாற்றுகின்றனர்; ஆசிரியர்கள் சிறார்களை அறிவாளிகளாக்கி, சிறந்த குடிமக்களை உருவாக்குகின்றனர். இன்றைய காலகட்டத்தில், மருத்துவம், கல்வி என, இரண்டுமே வியாபாரமாக பார்க்கப்படுகிறது.
பணத்தை பெரிதாக நினைக்காமல், மருத்துவத்தை, கல்வி போதிப்பதை சேவையாக கருதுவோரும் உள்ளனர். இதில் ஆசிரியை சுஜாதா தாடிபத்ரியும் ஒருவர். இதுவரை அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை.
பல்லாரி நகரின் கமேலா சாலையில் வசிப்பவர் சுஜாதா, 71. இவர் கலபுரகியில் டி.சி.ஹெச்., முடித்து, 1974ல் பல்லாரி மாவட்டம், கம்ப்ளி தாலுகாவில் ஆசிரியையாக பணியை துவக்கினார். அதன்பின் கம்ப்ளி, கம்ப்ளி பஜார், ஹரகினடோனி, கம்மரசேடு அரசு பள்ளிகளில் பணியாற்றினார்.
நிதியுதவி 2014ல் ஓய்வு பெற்ற இவர், மறுநாளே கமேலா சாலையில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று பாடம் போதிக்க துவங்கினார்.
அன்று முதல் இன்று வரை, அப்பள்ளியில் இலவசமாக பாடம் கற்று தருகிறார். இதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை ஒரு நாளும் அவர் விடுமுறை எடுத்ததே இல்லை. பள்ளியில் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்தால் நிதியுதவி வழங்குகிறார்.
திருப்தியான ஊதியம், சலுகைகள் வழங்கினாலும், ஊதிய உயர்வு, சலுகைகளை கேட்டு போர்க்கொடி உயர்த்தும் ஆசிரியர்கள் உள்ள இந்த காலத்தில், ஆசிரியை தொழிலை சேவையாக கருதி, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் சுஜாதா போற்றத்தக்கவர்.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் பொம்பனகவுடா கூறியதாவது:
ஆசிரியை சுஜாதா ஓய்வு பெற்ற பின், நாள் தோறும் எங்கள் பள்ளிக்கு வந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். நாங்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு வரும் அவர், நாங்கள் சென்ற பின்னரே, வீடு திரும்புகிறார்.
இதற்காக அவர் ஒரு பைசா வாங்கியதில்லை. பள்ளிகளில் ஏற்பாடு செய்யும் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு தானாக முன் வந்து நிதியுதவி செய்கிறார்.
ஏழை சிறார்கள் இப்பள்ளியில் படிக்கும் அனைவரும் ஏழை சிறார்கள். இவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற நோக்கில், சுஜாதா இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.
தற்போது கணவர் மற்றும் சகோதரருடன், பல்லாரி நகரின், சத்யநாராயணாபேட்டில் வாடகை வீட்டில் வசிக்கிறார். தினமும் நடந்தே பள்ளிக்கு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -