ADDED : செப் 05, 2026 03:28 AM

ஆசிரியர் பணியில் கடந்த 1995ல் சேர்ந்த நான், தற்போது தலைமை ஆசிரியராக இருப்பதை நினைத்தாலே பரவசமாகிறது. தினமும் பள்ளிக்கு சென்று மாணவர்களை பார்ப்பதே பிடித்தமான விஷயம். ஆசிரியராக இருக்கும் போது மாணவர்களுடன் நண்பர் போலவே பேசுவேன். மாணவர்களிடம் கடுமையாக நடக்க மாட்டேன்; மாணவர்களை அடிக்க மாட்டேன்.
ஒவ்வொரு மாணவரின் செயலையும் கவனிப்பேன். ஏதா வது, ஒரு பிரச்னையில் குற்றஞ்சாட்டப்படும் மாணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாட்டேன். அவர் தரப்பு நியாயத்தையும் கேட்பேன். அவரது குடும்பத்தின் நிலையையும் நினைத்து பார்த்தே முடிவெடுப்பேன். மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவர் தான் சிறந்த ஆசிரியர்.
என்னிடம் படித்த மாணவர்களில் மறக்க முடியாதவர் என்றால், தற்போது தினமலர் நாளிதழில் பணியாற்றும் அர்வின்குமார் தான். சிறுவயதிலேயே எதையும் எளிதில் புரிந்து கொள்வார். மற்றவர்களிடம் மரியாதையுடன் நடப்பார். தற்போதும், என்னை பார்த்தால் மரியாதை செலுத்தாமல் செல்ல மாட்டார். இதுபோல, வின்சென்ட் என்ற முன்னாள் மாணவர்.
என்னிடம் படித்த நிறைய மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். நான் எப்போதும் ஆசிரியராகவே இருக்கிறேன். இந்த ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது. ஆசிரியர் - மாணவர்கள் இடையேயான உறவு என்பது தாய் - பிள்ளை உறவு போன்றதே; இது காலத்தால் அழியாது.
லதா ராம்குமார், 50,
தலைமை ஆசிரியை தெய்வானையம்மாள், உயர்நிலை பள்ளி, ஹெச்.ஏ.எல்.,
