தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஆசிரியர் தினம்..

ஆசிரியர் தினம்..

ஆசிரியர் தினம்..


ADDED : செப் 05, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 03:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி வரும் மாணவர்களுக்காக

செலவழிக்கும் தமிழ் ஆசிரியை



நான், 1998 முதல் அரசு தமிழ் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறேன். இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலானோர் ஏழை மாணவர்களே. இவர்களிடம் பள்ளிக்கு தினமும் வருவதற்கு கூட பணம் இல்லை. இவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக, ஆட்டோ, பஸ் என போக்குவரத்துக்காக மட்டும் தினமும், 400 ரூபாய் செலவு செய்கிறேன்.

மாணவர்களுடம் அன்பாகவே நடப்பேன். அதுவே எனது இயல்பு. சில மாணவர்கள் வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்கு காசில்லை என என்னிடமிருந்து உரிமையாக கேட்பர். நானும் அவர்களுக்கு யோசிக்காமல் உதவி செய்வேன்.

இந்த பள்ளியில் மாணவர்களால் படிப்பதால் மட்டுமே, எனக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை அவர்களின் படிப்புக்கு செலவழிப்பதில் செலவு செய்வதில் தப்பில்லை என நினைக்கிறேன்.

அடுத்த ஆண்டு ஜூலையில் பணி ஓய்வு பெறுகிறேன். இதை நினைத்தாலே கண் கலங்குகிறது. தமிழ் பள்ளி எக்காரணம் கொண்டும் மூடப்படக்கூடாது.

வள்ளியம்மாள், 59. தலைமை ஆசிரியை,

அரசு தமிழ் உயர்நிலை பள்ளி, வாணி விலாஸ் ரோடு, மைசூரு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us