/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போதையில் சண்டை வாலிபர் அடித்து கொலை
/
போதையில் சண்டை வாலிபர் அடித்து கொலை
ADDED : ஆக 10, 2025 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலுார் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தார்.
மாலுாரின் மாஸ்தி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கனகல் கிராமத்தில் ஒரு கட்டடத்தில், நேற்று முன் தினம் மது விருந்து நடந்துள்ளது.
நண்பர்களான மாலுாரின் டேக்கலை சேர்ந்த ராகேஷ், 24, என்பவருக்கும், கனகல் கிராமத்தின் கோவிந்தராஜ், 28, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதங்கள் முற்றியது. போதையில் இருந்த கோவிந்தராஜ் உட்பட அவரின் நண்பர்கள் பலமாக தாக்கியதில் ராகேஷ் உயிரிழந்தார். இதை அறிந்த நண்பர்கள் அனைவரும் தலைமறைவாகினர். மாஸ்தி போலீசார் விசாரிக்கின்றனர்.