/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் மோதிய தகராறு வாலிபர் மண்டை உடைப்பு
/
பைக் மோதிய தகராறு வாலிபர் மண்டை உடைப்பு
ADDED : அக் 30, 2025 11:13 PM
புட்டேனஹள்ளி:  பைக்குகள் மோதியதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் மண்டை உடைந்தது.
பெங்களூரு, புட்டேனஹள்ளியில் வசிப்பவர் பிரதிக், 24. ஜே.பி.நகரில் உள்ள ஆன்லைன் கேமிங் சென்டரில் வேலை செய்கிறார். நேற்று காலையில் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு பைக்கில் புறப்பட்டார்.
பிரதிக் பைக்கும், எதிரே வந்த இன்னொரு பைக்கும் நேருக்கும் மோதிக் கொண்டன. அப்போது ஏற்பட்ட தகராறில் இன்னொரு பைக்கில் வந்த இருவர், பைக் சாவியை பறித்து, பிரதிக்கை தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்தது.
தலையில் கட்டுப் போட்டு, புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அவரிடம் புகாரை வாங்காமல் இரண்டு மணி நேரம் போலீசார் காத்திருக்க வைத்தனர். பிரதிக் உறவினர்கள் அங்கு வந்து நியாயம் கேட்ட பின், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

