/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமானம் போன்ற ட்ரோன் கீழே விழுந்ததால் பதற்றம்
/
விமானம் போன்ற ட்ரோன் கீழே விழுந்ததால் பதற்றம்
ADDED : ஜன 31, 2026 05:13 AM

தொட்டபல்லாபூர்: விமானம் போன்ற, 'ட்ரோன்' தரையில் விழுந்ததால், மக்கள் பதற்றம் அடைந்தனர். ட்ரோனை வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் புறநகரின் பாலனஜோகஹள்ளியின், 10வது கிராஸ் அருகேயுள்ள வீட்டின் முன், நேற்று காலையில், விமானம் வடிவில் இருந்த ட்ரோன் பறந்து வந்து கீழே விழுந்தது. இதை பார்த்த அவர்கள் பீதியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தொட்டபல்லாபூர் போலீசார், அங்கு வந்து ட்ரோனை கைப்பற்றினர். வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். தெர்மாகோல் பயன்படுத்தி விமானம் போன்று வடிவமைக்கப்பட்ட ட்ரோன் இதுவாகும். பேட்டரிகள் உட்பட எலக்ட்ரிகல் ஒயர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
தொட்டபல்லாபூர் சுற்றுப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லுாரி மாணவர்கள், விமான ட்ரோனை வடிவமைத்து சோதனை ஓட்டத்துக்காக பறக்க விட்டிருக்கலாம். அப்போது ரிமோட் தொடர்பு துண்டிக்கப்பட்டு கீழே விழுந்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில், சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது சாதாரண ட்ரோன். எந்த அபாயமும் இல்லை என்பது தெரிந்த பின், மக்கள் நிம்மதி அடைந்தனர்.

