sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தங்கவயல் செக் போஸ்ட்

/

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : ஜூன் 26, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இருட்டறையில் சட்டம்

ஐந்தாண்டுகளாக சிட்டியில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்குது. இதில் ஏழை - பணக்காரர்களுக்கு வெவ்வேறு சட்டம், நியாயம், இருப்பதையே காட்டியிருப்பதாக ஊரே பேசுது.

உ. ஸ்டேஷன் சாலையில் ஏழைகளின் வீடுகளை இடித்துத் தள்ளினாங்க. பி.எம்., சாலை அ.நகரில் பல ஏழைகளின் வீடுகளையும் இடித்து நொறுக்கினாங்க.

ஆனால், இன்னும் கூட சுராஜ்மல் சதுக்கம் முதல் அரசு மருத்துவமனை எதிர்புற சாலையில், உள்ள பெரிய பணக்காரங்களோட ஆக்கிரமிப்பு கட்டடத்தை டச் பண்ண மறுக்குறாங்க. கண்களை மூடிக்கிட்டாங்க.

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று பேச்சளவில் சொல்றாங்க. ஆனால் லஞ்சப் பணம் கண்ணை மறைத்து சட்டத்தை இருட்டறையில் வைக்குதே.

------

* அமையுமா மேம்பாலம்?

நுாறாண்டு காலமாக உரிகம் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டுவாங்களா? ரயில்வே கேட் அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை தவிர்ப்பாங்களா? இது, தினமும் அவதிப்படுறவங்க அங்கலாய்ப்பு.

உரிகம் ரயில் நிலையம் வடக்கு பகுதியில், சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம், கட்டுவதாக பல ஆண்டுகளாக சொன்னது சொன்ன வாக்கில் இருக்குது. இன்னும் கூட இதுக்கு நல்ல காலம் பிறக்கலயே.

மாநிலத்தை சேர்ந்தவர் ரயில்வே இணையமைச்சராக இருந்தும் கூட, ரா.பேட்டை - ப.பேட்டை சாலையில் உள்ள இந்த உரிகம் ரயில் நிலையம் அருகே, ரயில்கள் வந்து போகும் வரை, பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை மாறலயே.

------

* சர்வாதிகார போக்கு!

கோல்டு சிட்டியில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தின் ஒரு புதிய பிரிவை ம.பி.,யில் ஏற்படுத்த போறாங்களாம். அங்கு மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்க போறாங்களாம்.

அந்த பேக்டரியை வெளிமாநிலத்தில் ஏன் துவங்கணும்? இங்கு தேவையான உள்கட்டமைப்பு அனைத்தும் இருக்கும்போது எதுக்கு வீண் விரயம் என்கிறாங்க. ம.பி.,காரர்களை ஹேப்பிபடுத்த காட்டுற அக்கறையை, கோல்டு சிட்டி மீது ஏன் காட்டலன்னு ஊழியர்கள் கேட்கிறாங்க.

பணி நிரந்தரம் ஆக்கக் கோரி 26 நாட்கள் போராட்டம் நடத்தியவங்களுக்கு சம்பளம் இல்லாமல் போனதை தான் கண்டாங்க. ஆனால் பணி நிரந்தரம் ஆக்கவே இல்ல. தற்காலிக வேலையும் பறிபோகும்னு நிர்வாக ஆபீசர்கள் சூசகமா சொல்லி மிரள வைத்த அச்சம் தான் ஜெயித்திருக்கு. அதிகாரத்தில் இருக்குறவங்க சர்வாதிகாரமா செயல்படுவதாக அங்கலாய்கிறாங்க.

-------

* கனவு திட்டம் நிறைவேறுமா?

ஏற்கனவே சீனி நகரில் 5,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி ரயில் வேகன் தொழிற்சாலையை தயார் செய்தாங்க. அதை ஏன் கைவிட்டாங்களோ? தனியார் நிலத்தையும் கூட கையகப்படுத்த முயற்சிகள் நடத்தினாங்க.

பல்லாயிரம் கோடிக்கான இந்த திட்டம் 10 வருஷமா கிடப்பில் கிடக்குது. இந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது யார்? செங்கோட்டையில் 28 ஆண்டுகள் கொடி நாட்டி இருந்தவரின் கனவு திட்டமென அவர் அறிவித்ததால், அதே கட்சியின் பவர்புல் சீனிவாசப்பூர்காரர் தான் சூழ்ச்சி செய்து தடுப்பதாகவும் சொல்றாங்க.

ஆக்கலை விட அழித்தலுக்கு தான் வேல்யு ஜாஸ்தி போல. இருப்பினும், தற்போதைய ரயில்வே இணையமைச்சரை சந்தித்து மறுபடியும் இதே வேகன் தொழிற்சாலையை ஏற்படுத்த கனவு திட்டத்துக்காரர் கோரிக்கை கேட்டிருக்கிறார். பூக்காரராவது கருணை காட்டுவாரா?

***






      Dinamalar
      Follow us